2.2

கறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது […]... Read More
Jaffna2006B-065

நட்சத்திர அனுபவம்

தமிழ் மண நட்சத்திர வாரத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வழக்கமாக மாதம் இரண்டு பதிவுகள் படி என் ஊர் பற்றிய நினைவுகளோடு மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதிவந்த எனக்கு, நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு பதிவு வீதம் நட்சத்திர வாரம் பூராவும் நிரப்பவேண்டும் என்பது எனக்கு ஒரு வகையில் சவாலாக இருந்தது. நீண்ட கால அவகாசம் இருந்ததால் என் மனப்பதிவில் சில பதிவுகள் உருக்கொண்டு கருக்கட்டியிருந்தன. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பது போல் எழுத உட்காரும் […]... Read More
kazhcha-006.0

காழ்ச்சா – அன்பின் விளிம்பில்

நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. காழ்ச்சா என்றால் பார்வை (Vision), தரிசனம் என்று தமிழில் அர்த்தப்படும். மலையாளத்தின் சிறந்த திரைப்படைப்பாளிகளான பத்மராஜன், லோகிதாஸ் ஆகியோரின் உதவி இயக்குனராக இருந்து பின் இந்த “காழ்ச்சா” என்ற முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் பிளெஸ்ஸி. […]... Read More
DSC00333

அடைக்கலம்

இந்த நட்சத்திர வாரத்தில் இவரைப் பற்றி எப்படியாவது சொல்லவேண்டும் என்று நான் விரும்பிய எழுத்தாளர், சுதாராஜ். ஈழத்து எழுத்தாளரான இவர் மல்லிகை சஞ்சிகையினால் கண்டெடுத்துத் தந்த நல்ல சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்யும் போது அந்த நாட்டில் இந்தியர்களும் சரி ஈழத்தவர்களும் சரி, சந்திக்கும் அனுபவங்கள், வேதனைகளைத் தன் பேனா மையால் நிரப்பியவர். 1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் […]... Read More
Jaffna2006B-049

தேரடியில் தேசிகனைக் கண்டேன்!

சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது. எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது ” வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட” என்று […]... Read More
Tenter-Heart

பிஞ்சுமனம் – குறும்படப்பார்வை

நேற்று “பிஞ்சு மனம்” என்ற மனதை நெகிழ வைக்கும் குறும்படத்தை நான் பார்க்க நேர்ந்தது. இதனை எனக்கு அறிமுகப்படுத்திய, இப்படத்தின் பின்னணியில் இருந்த என் நண்பர் அஜீவனுக்கும் என் நன்றிகள். பிஞ்சுமனம் என்ற இந்தக் குறும்படத்தில் பொதிந்துள்ள கருப்பொருள் நம் ஓவ்வொரு குடும்பத்திலும் நாம் சந்திப்பவை, குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு […]... Read More
kana

மறக்கமுடியாத மலரக்கா

இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக என் வானொலிப் பணி மூலம் சந்தித்த எத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் என்று ஏராளம் அனுபவங்களை நான் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அவர்களை விடவும், அந்த அனுபவங்களை விடவும் மேலானதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்த நிகழ்வு. […]... Read More
vaadai-002.0

வாடைக்காற்று

செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் ” வாடைக்காற்று எழுதினாரே, அவரா?” என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த […]... Read More
sayanthan.0

சயந்தனுக்குக் கண்ணாலம்

பாரை மீனுக்கும் விள மீனுக்கும் கல்யாணம்…மன்னிக்கவும் சயந்தனுக்கும் வெர்ஜினியாவுக்கும் கல்யாணம்அந்த சுவிஸ் சனமும் சேருதைய்யா ஊர்கோலம் எங்கள் சக வலி, மன்னிக்கவும் வலைப்பதிவாளர் சயந்தன் வருகிற யூலை 8 & 9ஆந் தேதிகளில் ( எதுக்குப்பா ரெண்டு நாள்) பொண்ணு இப்பவே, “கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்” பாட்டு பாடீட்டே திரியுதாம். நம்ம மாப்பிளை சயந்தன் “புது மாப்பிளைக்கு புது யோகமடா” பாட்டை விசிலடிச்சுக்கிட்டே சுவிஸ் நாட்டுக்குப் பறக்கிறாராம்.மேலதிக விபரங்களுக்கு “நிக்கோல் கிட்மன்” புகழ் வசந்தனின் […]... Read More
1.2

ரச தந்திரம் – திரைப்பார்வை

ஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் சுற்றினேன், மிகச் சிறிய நகர் என்பதால் அதிக நேரம் உலாவத் தேவை இருக்கவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. ஆலப்புழாவில் ஒரு சினிமாவில் நல்ல மலையாளப்படம் பார்க்கலாமே என்ற முடிவு தான் அது. ஒரு ஆட்டோக்காரரை வழி மறித்து நல்ல படம் ஓடும் தியேட்டருக்குக் கொண்டுபோகும்படி கூறினேன். அந்தப்பக்கம் அடல்ஸ் ஒன்லி படங்கள் தான் ஓடும் […]... Read More