joganathan

எழுத்தாளர் செ.யோகநாதன் – சில நினைவலைகள்

ஈழத்து பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் மாரடைப்பால் 28-01-08 திங்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார். முன்னர் உதவி அரசாங்க அதிபராக பணி புரிந்தவர் என்பதோடு ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோகளில் ஒருவராகவும் விளங்கியவர். சிறுகதை,நாவல், நாடகம், சினிமா என பல்துறையிலும் ஈடுபாடுகொண்டு கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் என பல பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். ஈழத்தில்மட்டுமல்லாது தமிழகத்திலும் பல ஆண்டுகள் கலைப்பணியாற்றியவர். தழிழ்த்தேசியத்திலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர். ஐந்து தடவைகள்இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். தமிழகத்திலும் தழிழக […]... Read More
burned_library

புத்தகச் சாம்பலில் பூத்ததொரு நூலகம்…!

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது. “எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?” கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார். முதல் நாள் இரவு யூன் 1, 1981 “பொலிஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி 1981 இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் வியப்பானவையாகும். அதே பொலிசார் அன்று […]... Read More
1a

எனக்குப் பிடித்த என் பதிவுகளில் ஒன்று

“எல்.வைத்யநாதன் என்கிற வைத்தி மாமா கிட்ட நிறையவே நாங்க கற்றிருக்கின்றோம், காலைலே அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சு பத்து மணிக்கும் அவரோட கிளாஸஸ் போகும், அவர் சொல்லிக் கொடுக்கும் போது அதை ஒரு பிரவாகம் மாதிரி அதை எடுப்பார். ஆனந்த பைரவி ராகத்தை எடுத்தாருன்னா இன்னிக்கு ஒரு மாதிரியும், அடுத்த நாள் வேறோர் அணுகுமுறையில் அதைக் கொடுப்பார். அவர் ஒரு பெரிய மாமேதை, அவர்க்கிட்ட கத்துக்கிற ஒரு வாய்ப்புக் கிடைச்சது ஒரு பெரிய பாக்கியம். “ இப்படியாக தனது […]... Read More
Pongal_140107_002

புலம்பெயர் வாழ்வில் பொங்கல்…!

இன்று தைப்பொங்கல் காலையாக விடிகின்றது. வேலைக்கு விடுப்பெடுத்து ஆலய தரிசனம் செல்ல முன் எங்கள் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிலையக் கலையகம் செல்கின்றேன். காலையில் நேயர்களோடு இணைந்து நேரடி வாழ்த்துப் பரிமாறல்களோடு சிறப்பு வானொலி நிகழ்ச்சியாகக் கழிகின்றது. ஊரைப் பிரிந்து வாழும் உறவுகளின் மனத்தாங்கல்களோடும், வாழ்த்து நிகழ்ச்சி மலரும் நினைவுகளாகவும் அமைந்தது அந்த நிகழ்ச்சி. இத்தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பகிரப்பட்ட இரண்டு கவிதைகள் வழக்கத்துக்கு மாறாக இத்தைப்பொங்கல் நாளுக்குப் புது அர்த்தம் கற்பிக்கின்றன. எல்லோருமே, எல்லாச் […]... Read More

நந்தனம் – ஒரு வேலைக்காரியின் கனவு

என் சின்ன வயசுக்காலம் இப்போது நினைவில் பூக்கின்றது. குளித்து முடித்து விட்டுச் சுவாமி அறைக்குப் போய்த் தான் காலையும் மாலையும் மறுவேலை பார்க்க முடியும். திருநீற்றை அள்ளி நெற்றியில் படர விட்டுவிட்டு, நாலைந்து தேவாரங்களைச் சுவாமிப் படங்களை நோக்கிப் பாடி விட்டுக் கண்ணை மூடிக் கொண்டே“அப்பூ சாமி! நான் சோதினையில் நல்ல மார்க்ஸ் வாங்க வேணும்”” யூனிவர்சிற்றிக்கு எண்டர் பண்ண வேணும்”“கார் வாங்க வேணும்” என்று முணுமுணுத்து வாய் மூல மகஜரைக் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டுத்தான் அங்கிருந்து […]... Read More