IMG_1130 train IMG_0970 IMG_0971

யாழ்ப்பாண யாத்திரை

 கடந்த நவம்பர் மாதம் தான் தாயகத்துக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தேன், அப்போது நினைக்கவில்லை அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு பயணம் வாய்க்குமென்று.  யாழ்ப்பாணத்தில் இருக்கும் என் பெற்றோரைக் காணவும், இன்னும் சில தனிப்பட்ட வேலைகளுக்காகவும் மீண்டும் தாயகம் நோக்கிப் பயணப்பட வேண்டியிருந்தது.  ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவுக்கும் காத்திருக்கும் கொக்கு போல மலிவு விலை விமானச் சீட்டுக்கள் மலேசியன் எயார்லைன்ஸ் வழியாக கைக்கெட்டியும் இறுதி நேரம் வரை என் பயணம் குறித்து முடிவெடுக்காததால் வழக்கம் போல சிங்கப்பூர் […]... Read More
1

சித்தெறும்பு என்னை கடிக்குது

வழக்கம் போல எனக்கே எனக்கான பொழுதுபோக்கைத் தேடி YouTube ஐ மேய்கிறேன். சில சமயம் மனசுக்குள் ஏதாவது ஒரு பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்து அந்தப்பக்கம் போனால் தேடிப்போன பாடலை விட்டு வேறு ஏதாவது பாடலில் மோகம் வந்து கேட்கத்தோன்றும். அப்படித்தான் இன்றும், வெகு நாள் கழித்து “சின்னராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது” கண்ணிற் பட்டது.  பாடல் ஒலிக்கிறது, என் நினைவுச்சுழல் தொண்ணூற்றி மூன்றை நோக்கிப் பின்னோக்கிப் போகிறது. அப்போது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்த […]... Read More