1

என் எழுத்துலகத் துரோணர் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணையை இழந்தேன்

அவுஸ்திரேலியாவுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் உயர்கல்விக்காக விமானம் ஏறும் போது மறக்காமல் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணரின் நாடகங்கள் தாங்கிய ஒலிப்பேழைகளை என் பயணப்பொதிக்குள் வைத்துவிட்டேன். யாரையும் தெரியாத அந்நிய தேசத்தில் என்னோடு கதைக்கவும் சிரிக்கவும் இந்த நாடகங்கள் தான் துணை நிற்கும் என்ற என் ஆரூடம் பொய்க்கவில்லை. எனக்கான உற்ற துணையாக 95 ஆம் ஆண்டுகளில் இந்த நாடகப் பேழைகளே என்னை ஏந்தின. கடந்த எட்டு வருடங்களுக்கு முந்திய வலைப்பதிவு அனுபவங்களில் ஈழத்து மொழி வழக்கில் எழுதப்போகும்போதெல்லாம் கே. […]... Read More
blogger-image-393436911

பாலுமகேந்திரா எனும் அழியாத கோலம்

“நெஞ்சில் இட்ட கோலம் எல்லாம் அழிவதில்லை  என்றும் அது கலைவதில்லை எண்ணங்களும் மறைவதில்லை” அழியாத கோலங்கள் திரைப்படம் சுமந்த கரு எத்தனை பேருக்குப் பொருந்திப் போகிறதோ தெரியவில்லை ஆனால் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட புலம்பெயர் தமிழர் ஒவ்வொருவர் வாழ்வின் ஒரு சில அத்தியாயங்களையாவது அது சுமந்து நிற்கும்.  இன்றைக்கும் புலம் பெயர் தேசத்தின் ஒரு மூலையில் இருந்து தன்னோடு கூடப்படித்தவன் எங்கிருக்கிறான், எப்படியிருக்கிறான், உயிரோடு இருக்கிறானா  என்று தேடும் வலி சுமந்த வாழ்வின் தேடலோடு இருக்கும் […]... Read More