உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – கேள்வியும் நானே பதிலும் நானே

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் ?

கேள்வியும் நானே பதிலும் நானே ?

? நிறையப் படித்த எழுத்தாளர் படைப்புகள்

செங்கை ஆழியான், சுஜாதா

? பிடித்த எழுத்தாளர் படைப்புகளில் படைத்ததில்
பிடித்த நாவல்கள்

காட்டாறு – செங்கை ஆழியான்
பிரிவோம் சந்திப்போம் – சுஜாதா

? இன்று வரை மறக்க முடியாத படைப்புகள்

கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
மனித மாடு – அ.செ.முருகானந்தம்

மனித மாடு நூல் இணைப்பு http://www.noolaham.org/wiki/index.php/மனித_மாடு

? போர்க்கால இலக்கியங்களில் மனதுக்கு நெருக்கமாக அமைந்த படைப்புகள்

ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி
நினைவழியா நாட்கள் – புதுவை இரத்தினதுரை

? பிடித்த கவிஞர், அவர் படைப்பில் பிடித்த கவிதைப் புத்தகம்

மு.மேத்தா
எல்லாமுமே குறிப்பாக “ஊர்வலம்”

? தொடர்ச்சியாகப் படித்த சிறுவர் சஞ்சிகை

 ராணி காமிக்ஸ், ரத்னபாலா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ், கோகுலம்

? இன்று வரை தொடர்ச்சியாகப் படிக்கும் சஞ்சிகைகள்

ஆனந்த விகடன், குமுதம், காக்கைச் சிறகினிலே, ஜீவ நதி

? படித்ததில் பிடித்த சஞ்சிகைகள்

இலங்கை – சிரித்திரன், மல்லிகை, உள்ளம்
இந்தியா – துளிர்

? பதிப்புத்துறையில் சமீபத்தில் பார்த்துப் பிரமித்த பதிப்பக முயற்சி, வடிவமைப்பு

குமரன் புத்தக இல்லம் (கொழும்பு)

? இளம் பராய வாசிப்பு அனுபவத்தில் திருப்பத்தை உண்டு பண்ணிய எழுத்தாளர் படைப்புகள்

சுதாராஜ் சிறுகதைகள் (மல்லிகையில் வெளிவந்தவை)
அக்கரைகள் பச்சையில்லை – அருள் சுப்ரமணியம்
லங்கா ராணி – அருளர்

? பிடித்த சிறுவர் கதை எழுத்தாளர்களும் அவர்கள் எழுதியதில் மிகவும் பிடித்தவையும்

வாண்டு மாமா – ஓநாய்க் கோட்டை
அழ வள்ளியப்பா – நீலா மாலா

? மனதைப் பாதித்த சிறுகதைகளில் ஒன்று

நகரம் – சுஜாதா

? பிடித்த மொழி பெயர்ப்பு இலக்கியம்

கருணாசேன ஜயலத் எழுதிய “Golu Hadawatha” தமிழில் “நெஞ்சில் ஒரு இரகசியம்”என்று தம்பிஐயா தேவதாஸ் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது

? சமீபத்தில் படித்ததில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய படைப்பு

எழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்

? தமிழ்ப் பதிப்புத்துறையின் எதிர்காலம், குறிப்பாக ஈழத்தமிழரது முயற்சி குறித்து

இன்றைய காலகட்டத்தில் ஒரு படைப்பை 200 பிரதிகளைப் பதிப்பித்து வாசிக்கத் தகுந்தவர்களுக்கு மட்டுமே அவற்றை மையப்படுத்திச் சென்றடைய வைத்தால் அதுவே பெரிய வெற்றி என்று குமரன் புத்தக அதிபர் என்னிடம் பேசும் போது குறிப்பிட்டார்.
அதை நான் வழிமொழிகிறேன்.
இதுவரை மூன்று புத்தகங்களைப் பதிப்பித்த அனுபவத்தில், ஒரு குறித்த நூலை இலங்கை வாசகருக்கு மட்டும் மையப்படுத்தியதாக உருவாக்கினால் 200 – 300 பிரதிகளும்,இந்திய வாசகரையும் சேர்த்தால் 400 – 500 பிரதிகளும் போதுமானது. முதல் முயற்சி வெற்றியடைவதைப் பொறுத்து இரண்டாம் பதிப்பு முயற்சியில் இறங்கலாம்.

உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்து எழுத்தாளரில் இருந்து தாயகத்தில் இருப்போர் வரை தம் நூல்களைக் கொண்டு சேர்ப்பதற்கான முறையான இணைய நூல் அங்காடி இல்லாதது பெருங்குறை.

Amazon Kindle இல் மின்னூல் வடிவில் தம் படைப்புகளை ஏற்றும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

இன்று இலங்கையிலுள்ள பாடசாலைகள் தம் நூலகங்களுக்கு ஈழத்தமிழ் எழுத்தாளரது நூல்களை வாங்க அதிகம் கரிசனை கொடுப்பதில்லை என்ற கசப்பான உண்மையை அறிய முடிகிறது.
எழுத்தாளன் தன் படைப்பைக் கூவி விற்பதிலோ, திணிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை அதே சமயம் தன் படைப்பு சென்றடையக் கூடிய வாசகனுக்கு முறையான விளம்பரப்படுத்தலைச் செய்ய வேண்டும்.

? வாசிக்கப் பிடிக்காத எழுத்துகள்

வரலாற்றைப் புரட்டோடும், காழ்ப்புணர்வோடும் திரித்து எழுதும் படைப்புகள், தமிங்கிலிஷ் கட்டுரைகள்

?குன்றிப் போகும் வாசிப்புப் பழக்கத்தை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்

நாளொன்றுக்கு ஒரு மணி நேர வாசிப்பு அல்லது வாரம் ஒரு புத்தகம் என்ற கொள்கை

? மின்னூல்கள் குறித்து

கிடைத்தற்கரிய, ஆவணப்படுத்த வேண்டிய படைப்புகள் மின்னூல்கள் ஆக்கப்படல் வேண்டும். உதாரணமாக மதுரைத் திட்டம் http://www.projectmadurai.org/pmworks.html
ஈழத்து நூலகம் திட்டம் http://www.noolaham.org./wiki
மிக முக்கியமானவை.
ஆனால் எழுத்தாளர், பதிப்பாளர் அனுமதியின்றி மின்னூல் வடிவங்களாக்கி இணையத்தில் பகிரப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல. இவற்றைப் படிக்கும் வாசகனின் நேர்மை ஒருபக்கம் இருக்க, இணையத்தில் இவ்வாறு மின்னூலாகப் பகிரப்படுபவற்றை ஒரு சத வீத வாசகரேனும் படிப்பாரா என்பது ஐயமே.

? உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாளில் நினைவு கூர வேண்டிய ஈழத் தமிழ் இலக்கியச் செயற்பாட்டாளர்

அவுஸ்திரேலியாவில் வாழும் கலை இலக்கியவாதி திரு லெ.முருகபூபதி
தான் கொண்ட அரசியல் நிலைப்பாடு எதுவாகினும் இலக்கியத்தில் சுய விருப்பு வெறுப்புகள் அற்ற படைப்பாளி மற்றும் விமர்சகர். அவுஸ்திரேலியக் கலை இலக்கியச் சங்கத்தின் நிறுவனராக, செயற்பாட்டாளராக இயங்கினாலும், இவரே தனி மனித இயக்கமாக கலை, இலக்கிய ஆளுமைகள் வாழும் காலத்திலும், அவர்கள் உதிரும் போதும் ஆவணமாக நின்று சுய விளம்பரத்தை ஒதுக்கி தன்னிடம் தேங்கியிருக்கும், தேடலில் பதித்த நினைவுகளை வெளிப்படுத்துபவர்.

? அடுத்த ஆண்டு புத்தக நாளுக்குள் அதிகம் படிக்க நினைக்கும் படைப்புகள்

எழுத்தாளர் பிரபஞ்சனுடைய படைப்புகள்.

சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவது இருக்கட்டும். எழுத்தாளர்கள் எத்தனை பேர் சமூகத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? -பிரபஞ்சன்