வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்

நேற்றுப் போல் இருக்கின்றது ஆனால் காலம் வெகுவேகமாக ஐந்து ஆண்டுகளைச் சுற்றி விட்டு நிற்கின்றது. டிசெம்பர் 5, 2005 இந்த நாளில் தான் என் வலைப்பதிவு ஓட்டம் ஆரம்பிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கிய ஓட்டம் மடத்துவாசல் பிள்ளையார் துணையோடு இன்னும் பயணித்துக் கொண்டிருகின்றது. இந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை அனுபவங்கள், இவை மட்டுமா? அந்தக் காலகட்டத்தில் செழுமையான பதிவுகளைத் தந்து கொண்டிருந்த பலர் இன்று ஏறக்குறைய வலைப்பதிவு உலகை விட்டு விலகிப்போன நிலை. இந்த வலையுலக அனுபவம் வழி, நண்பர்களாக ஒவ்வொரு திசைகளில் இருந்தும் எனக்குக் கிடைத்ததே ஒரு பெரும் பாக்யமாக எண்ணுகிறேன். அதே சமயம் திறமான படைப்பாளிகளாகக் காட்டிக் கொண்ட பலர் வலையுலக அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகும் போது ஒரு வாசகனாகப் பெரும் ஏமாற்றத்தை எனக்குக் கொடுத்து வந்திருக்கின்றன.

இந்த ஆண்டு தாயகத்தை நோக்கிய என் பயணத்தின் தாக்கத்தைப் பெரும்பான்மைப் பதிவுகளில் பார்க்கக் கூடும். இப்படியான பசுமையான நினைவுகள் தான் என் வாழ்க்கை ஓட்டத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் நினைவுகள், அதனால் என் பயணப்பதிவுகள் இன்னொரு நாள் நானே மீண்டும் படித்து அந்த நினைவுகளில் மூழ்கிக்கொள்ளும் சமாச்சாரங்களாகவே இருக்கின்றன.

என் உலாத்தல் வலைப்பதிவின் வாசகராகவும், ஜேர்மனியில் இருந்து இணையம் மூலம் எனது வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதோடு கருத்துக்களையும் பரிமாறிய சகோதரி அல்போன்ஸா புற்று நோய் கண்டு சில மாதங்களுக்கு முன் இறந்ததும். எனது வானொலி நிகழ்ச்சிகளில் 273 வாரங்கள் அரங்கேறிய அறிவுக்களஞ்சியம் போட்டி நிகழ்ச்சியின் ஆரம்பப் போட்டியாளர் அகால மரணம் அடைந்ததும் தனிப்பட்ட துயரங்கள்.

எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில்

எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி

இவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக

ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.

பொது வாழ்க்கைக்கு வந்தால் கல்லடி படாமல் இருக்க முடியாது என்பதற்கு என் வானொலி வாழ்க்கையில் இருந்து வலையுலகம் வரை வியாபித்திருப்பதை விலக்கமுடியாத சவாலாகவே எதிர் கொள்கின்றேன். சொல்ல வந்த கருத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்துத் திணிப்பை ஏற்படுத்திக் குளிர்காய்பவர்கள் ஒரு பக்கம், எல்லா இடத்திலும் தமது சுய இச்சையைத் தணிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம் போன்ற சவால்களைச் சந்தித்தலும் இவையெல்லாம் கடந்து, சொல்லும் சேதி புரிந்து மனதுக்கு நெருக்கமாகிப் போனவர்கள் பலர் இன்னும் வலையுலகச் சூழலில் இருப்பதால் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
www.kanapraba.com

வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்

2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

2009 ஆம் ஆண்டின் பதிவுகளில் பட்டியல்

88888888888888888888888888888888888888888888888888888888888

இந்த 2010 ஆம் ஆண்டில் எழுதிய பதிவுகளின் பார்வை

ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்

மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு “ஆகாசவாணி” கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை
“எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்”.

அன்ரெனா திருப்பு…! தூரதர்ஷன் பார்க்க,

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள்.

Balibo – “நிர்வாணப்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் கதை”

“வன்னியிலே தற்போது நடந்து வரும் சிறீலங்கா அரசின் மூர்க்கமான தாக்குதல்களுக்கு மத்தியில் இருந்து நான் உலகத்துக்கு இந்த அவலங்களை எடுத்து வருகின்றேன், எனக்கு பக்கத்தில் எல்லாம் குண்டுகளும், ஷெல்களும் விழுந்து வெடிக்கின்றன. நாளை என் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு நான் உங்களோடு பேசுகிறேன்” – வன்னிச் செய்தியாளர் அமரர் பு. சத்தியமூர்த்தி

ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்

யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமான ஈழத்துக் கலைஞர் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களுக்கு அஞ்சலிச் செய்தியாக அமைகின்றது.

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளரும் பாரம்பரிய சைவ வல்லுநருமான கலாபூஷ ணம் செல்லையா மெற்றாஸ்மயில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது-65.

“1999” – சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை

புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே “1999” படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ

இங்கிலாந்தின் லூசியம் பகுதி நண்பர்களால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான “பூபாளம்” என்ற தமிழ் ரெகே பாடல்களாக வந்து தனித்துவமான படைப்பாக இன்றும் இருக்கின்றது. இந்தப் படைப்பு வந்து இருபது வருஷங்கள் கடந்தும் புலம்பெயர் வாழ்வியலின் இன்றைய சூழலை இது காட்டுவதும் கசப்பான உண்மை.

அருட்செல்வம் மாஸ்டர் வீடு

காதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் கூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.

நினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.
இன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.
வகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.

வரியப்பிறப்பு வந்துட்டுது…..

நான்கு வருசங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பனி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காறனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்காத்து மூஞ்சையிலை அடிக்குது.
அன்று நாங்கள் நிறையச் சிரித்துக் கொண்டிருந்தோம்,மிச்சம் ஏதும் வைக்காமல்……..

விதியைத் துரத்திய குட்டியானையின் கதை கேளுங்கோ

இப்பொதெல்லாம் தன் அண்ணன் Luk Chai போலவே தானும் சில விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறான். ஓடிப்பார்க்கிறான், உலாவி நடக்கிறான், தண்ணீர்த் தொட்டியில் மெல்ல ஒவ்வொரு காலாய் விட்டுப் பார்க்கிறான் ஆனால் முழுதாக இறங்கினால் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு கணம் தாமதித்து நிற்கிறான். பாழாய் போன பயம் மட்டும் வந்து தானாக ஒட்டிக்கொள்கிறது. Luk Chai வின் முகத்தை முகர்ந்து முட்டிப் பார்த்து நேசத்தோடு கதை பேசுகிறான்.

பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம் “தீட்சண்யம்”

புரிந்து கொள்ளுங்கள்! இது சிதையல்ல!
பட்டறிவுப் புத்தகம் பக்கம் புரண்டு கிடக்கிறது!

வேண்டுமென்றா செத்தேன்? இல்லை!
நாண்டு நின்று நல்லவரை நாசமாக்கும்
கொடுமைக்கு நானும் பலியானேன்!

வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

தலையைக் கவிழ்த்தபடி
தாம் தொலைத்த வாழ்க்கையினை
தேடுகிறார் தமிழர்கள்!
தென்னிலங்கைச் சோதரர்காள்,
இந்த மயானத்தில்
என்னத்தைத் தேடுகிறீர்?
வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

– கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப)

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.

LP Records சுழற்றும் நினைவுகள்

இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.

ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்

இவரே குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டில் திரைப்படத் கூட்டுத்தாபனத்தில் இருந்த அதுவரை தயாரிக்கப்பட்ட 99 வீதமான ஈழத்துத் தமிழ் சினிமாக்களின் படச்சுருள்களின் ஒரே ஒரு பிரதியையும் சிங்களக்காடையர்கள் அழித்து ஒழித்தது இவருக்குத் தெரியுமோ என்னவோ. அப்படியென்றால் 1983 இற்கு முன் வந்த ஈழத்துத் தமிழ் சினிமாவை இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு இது தரமில்லாதது, இது தரமானது என்ற முடிவை ஞாநி எடுத்திருப்பாரா?

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் பேசுகிறார்

ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்தேன். ஈழத்தின் முக்கியமானதொரு இசைக்கலைஞனின் வாழ்வின் பெரும்பகுதியை வானலை வழியே பகிரும் வகையில் இரண்டு மணி நேரமாக அவரது வாழ்வியல் அனுபவங்களை எங்களுக்குத் தந்தார்.

3 idiots போதித்த பாடம்

அன்று என் வகுப்பறையின் எங்கோ ஒரு மூலையில் இருந்து, தன் சுயத்தைத் தேடி எங்கோ போய்த் தொலைந்து காணாமல் போன யாரோ ஒரு சகபாடியைத் தேடுகின்றேன், ராஞ்ஜோவின் நண்பர்கள் போல…….

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் ஒன்று

மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் என் தாயகப் பயணம் இந்த மாதம் கைகூடியிருக்கின்றது. கொழும்பில் இறங்கி அடுத்த நாளே அம்பாள் எக்ஸ்பிரஸில் ஏறி சொந்த ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் இரண்டு

எனது முந்திய பதிவில் “தயவு செய்து பாதணிகளோடு உட் செல்லாதீர்” என்று இன்ரநெற் கபே போன்ற இடங்களில் போட்டிருந்ததாகச் சொல்லியிருந்தேன். பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் “நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்” அவ்வ்வ் :-((((

செல்வச்சந்நிதி முருகனைச் சந்தித்தேன்

உள்ளூரில் இருக்கும் வைரவர் கோயில்கள் முதல் கிடுகுக் கொட்டிலில் இருந்த கோயில்கள் எல்லாம் டொலர்களாலும் யூரோக்களாலும் மாடமாளிகைகளாக எழுந்தருளி நிற்கையில் பழமையும் எளிமையும் கொண்டு அருள் பாலிக்கும் செல்வ சந்நிதியான் என் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றான்.

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் மூன்று

ஆச்சரியமும் பெருமிதமும் கலக்க என்னைக் கட்டியணைக்கிறார்.
“என்னட்டைப் படிச்ச பிள்ளை இப்படி புத்தகம் எழுதுவதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு” என்னைக் கட்டியணைத்தார் அப்போது. எனக்கு லேசாகக் கண்களில் துளிர்க்க
“எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் ”

நாவலர் றோட், நல்லூரில் இருக்கு நூதனசாலை

ஏதோ காயலான்கடைச் சரக்கு மாதிரி உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று எச்சங்களைக் காண தென்னிலங்கை யாத்திரிகர்கள் படையெடுத்து வரும் போது, “இங்கே பாருங்கள் இப்படியெல்லாம் ஆண்ட சமூகம் இது” என்று காட்டக் கூட ஒரு முன்மாதிரியாக இவற்றை முறையாகப் பயன்படுத்தலாமே?

எஞ்சிய எம் வரலாற்று எச்சங்கள் கையேந்துகின்றன இன்றைய அரசியல் அநாதைகளான நம் தமிழரைப் போல…..

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் நாலு

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கொடியேற்ற நாளில் கோயிலுக்குப் போய் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு தரிசித்தேன். அருச்சனை செய்ய இன்னும் 1 ரூபா தான். கோயில் சுற்றுப் புற வீதியில் செருப்பு, சப்பாத்தோடு திரிய முடியாது. பாதணிகள் பாதுகாப்பு றாக்கைகளை இரவோடிரவாக யாழ் மாநகர சபை செய்து வைத்திருக்கிறது. தென்னிலங்கையில் இருந்து கம்பாயம், சாரத்துடன் வரும் கூட்டம் நல்லூரில் எல்லாப் பக்கமும்.

இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு

என் தாயகப்பயணம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அமைந்தது. இந்த இடைவெளியில் வலைப்பதிவு எழுதும் இலங்கைப் பதிவர்கள், மற்றும் என் பதிவுகளை வாசிக்கும் உறவுகள் என்று நிறையப் பேரைச் சம்பாதித்தாலும் இந்தப் பயணத்தில் இவர்கள் எல்லோரையும் சந்திக்காதது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. அதற்காக மிகவும் வருந்துகின்றேன்.
கண்டிப்பாக என் அடுத்த பயணத்தில் நாம் சந்திக்க வேண்டும் என் சகோதரங்களே

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை

பின்னேரம் மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போகிறேன். அங்கே நின்ற ஒரு பெடியன்
“அண்ணை என்ன உங்களைக் காலமை தியேட்டர் பக்கம் கண்டது போல இருக்கு”

யாழ்ப்பாணம் மாறவில்லை 😉

என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்

விருப்பமில்லாத பிள்ளையைப் பாலர் வகுப்புக்குத் துரத்தி அனுப்புமாற் போல மனம் உள்ளே மெளனமாகக் குமுற அம்பாள் பஸ்லில் ஏறுகிறேன். மீண்டும்
“உன்னை நினைத்து” படத்தைப் போட்டுச் சாவடிக்கிறார்கள்.
என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே!

“தெய்வம் தந்த கலைஞன்” ரகுநாதன்

இந்த ஆண்டு எமது ரகுநாதன் ஐயாவுக்கு பவள விழா ஆண்டு. கடந்த மாதம் அவர் வாழும் பாரீஸ் மண்ணில் விழா எடுத்துக் கெளரவித்திருக்கின்றார்கள் எம் உறவுகள்.
மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் தமிழ் சினிமாவின் படைப்பாளியாக, குறும்பட நடிகராக இன்றும் ஓயாது கலைப்பணி ஆற்றிவருகின்றார் எங்கள் ரகுநாதன் அவர்கள்.

the social network – தொலைந்த நட்பில்…..

பள்ளி நாட்களிலோ, கல்லூரி வாழ்வியலிலோ மனதில் எங்கோ தோன்றும் ஒரு பொறி தான் பெரு நெருப்பாய் எம் வாழ்க்கையைப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது. அப்படித் தான் இந்த இரண்டு நண்பர்களும் எதிர்பாராத வேளையில் சிறுபுள்ளியாய் உருவாக்கும் ஒரு திட்டம் உலகத்தின் கடைக்கோடி மனிதனையும் ஆட்கொள்ளுகின்றது. ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை? அதைத் தான் the social network சொல்லிப் போகின்றது.

Warning: get_comment(): Argument #1 ($comment) must be passed by reference, value given in /homepages/6/d202781224/htdocs/Madathuvaasal/wp-includes/class-wp-comment-query.php on line 484

29 thoughts on “வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்”

 1. வாழ்த்துகள் கானாஸ்…இனிவரும் ஆண்டுகளும் தங்களுக்கு இனிய அனுபவங்களையும் – எங்களுக்கு இனிய இடுகைகளையும் தரட்டும்…:-)

  அப்படியே எங்க ஊருக்கும் வந்தீங்கன்னா அடுத்த ஆண்டும் இதே போல அமையும்..;-)

  பிரியாணி ஈஸ் ஆன் தி வே….

 2. வாழ்த்துக்கள் சகோதரம்… எம் ஊர்காரர் ஒருவரின் இந்த சாதனை வெற்றியை கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்…

  அன்புச் சகோதரன்…
  மதி.சுதா.
  வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

 3. மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. வலைப்பதிவைத் தூசி தட்டலாம் என்ற எண்ணத்துக்கு வலு சேர்க்கிறது உங்களுடைய இந்த இடுகை. 🙂

  சீக்கிரம் சந்திப்போம்.

  -மதி

 4. வாழ்த்துக்கள் நண்பா. இன்னும் பல நூறாண்டு யூத்தாகவே பதிவு எழுத மடத்துவாசல் பிள்ளையாரை நானும் வேண்டுகின்றேன்.

 5. வாழ்த்துக்கள் பிரபா. இன்னும் இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும்.
  அன்புடன் மங்கை அக்கா

 6. வாழ்த்துகள் பிரபா….உங்களின் அயராத முயற்சியில் பல அரிய விடயங்களை நாம் அறிய முடிந்தது. நிறைய ஈழத்துக் கலைஞர்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டினீர்கள். யாரும் செய்யாத செயல் இது. எமது பண்பாடு, கலாசார விழுமியங்களை விருப்போடு ஆவணப்படுத்தியும் அதனை எல்லோரும் அறியும் படியாகவும், இப்போது வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்குத் தெரியப்படுத்தவும் உங்கள் சீரிய பணி இதுவரை சிறப்பாகவே அமைந்துள்ளது. தாய்மண் என்பதைக் கடந்து திரையிசைப் பாடல்கள், திரைப்படப் பின்னனி இசை, என உங்கள் ரசனைகள் எங்கள் ரசனைகளாகவும் அமைந்தே இருந்தது.

  ஆலயத் திருவிழாக்கள் தொடர்பான பதிவுகள், நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகள் என எமது மக்களின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும் பதிய நீங்கள் தவறவில்லை.

  இது தவிர வானொலி மூலம் நீங்கள் செவ்வி கண்ட பல தாயக உறவுகள், இலை மறை காயான அவர்களை வெளி உலகுக்கு கொணர்ந்த விதம் (தாயக வானொலிகளே செய்யவில்லை) எல்லாமே போற்றத்தக்கது. ஆண்டு அய்ந்து என்ன இன்னும் ஆண்டாண்டு காலம் ஈழத்தமிழ் மண்ணின் மணத்தை உலகில் பரப்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.

 7. பிரபா, இந்த பதிவில் உள்ள சின்ன சிறுவன் நீங்களா? நீங்கள் சிறுவனாக இருக்கும் போது எடுத்த படங்களா?

 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

  மங்கை அக்கா

  இந்தச் சிறுவர்கள் நான் சமீபத்தில் தாயகம் போன போது எடுத்தவை.

 9. வாழ்த்துக்கள் அண்ணா..
  உங்கள் பல்வகைத் திறமை குறித்து வியந்திருக்கிறேன்.. அடிக்கடி..
  வானொலியிலும் நீங்கள் தொடர்ந்து செய்து வரும் சாதனைகளையும் வியக்கிறேன். தொடரட்டும் உங்கள் பனி..

  //இவையெல்லாம் கடந்து, சொல்லும் சேதி புரிந்து மனதுக்கு நெருக்கமாகிப் போனவர்கள் பலர் இன்னும் வலையுலகச் சூழலில் இருப்பதால் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.//
  வாழ்த்துக்கள்.

 10. தல.. வாழ்த்துக்கள்.

  ஐஞ்சு வருசமா எனக்கு தலைசுத்து இருக்கிறது. இப்ப தான் காரணம் விளங்குது. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *