இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு

மேற்படம் காலிமுகத் திடலில் கொழும்புப் பதிவர்களுக்காக காத்திருக்கும் போது கமராவால் சுட்டது.

டிசெம்பர் 2005 இல் வலைப்பதிவுலகிற்கு வந்து ஐந்து ஆண்டுகளை எட்டிப் பிடிக்கும் இந்த வேளை இதுவரை வலைப்பதிவுச் சந்திப்புக்கள் என்று எடுத்துக் கொண்டால் முதன் முதலில் என் வலையுலகின் அருமை நண்பர் ஜி.ராகவன் தான் பெங்களூரில் வைத்து மார்ச் 30, 2006 ஆம் ஆண்டில் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அப்போது சிட்னியில் இருந்து பணி நிமித்தமான நான் அப்போது பணி புரிந்த Oracle நிறுவனத்துக்கு வந்த போது நிகழ்ந்தது. தொடர்ந்து அதே ஆண்டு ஈழப்பதிவர் நேசத்துக்குரிய நண்பர் ஈழநாதனைச் சந்திருந்தேன். பின்னர் மீண்டும் அதே ஆண்டு பெங்களூர் வருகையில் என்னை சித்தி பிள்ளை என்று முறை சொல்லி முதன் முதல் பின்னூட்டம் போட்ட சகோதரன் செந்தழல் ரவியைச் சந்தித்தேன். (ஈழத்தமிழர் என்றால் தமிழகத்தவருக்கு சித்தி முறை தானே என்ற அவர் விளக்கம் இன்றும் என்னை நெகிழ வைக்கும் நினைக்கும் போதெல்லாம்). இந்தச் சந்திப்புக்களை எல்லாம் நான் சந்தித்த வலைப்பதிவர்கள் என்ற பதிவில் இட்டிருக்கின்றேன்.

பின்னர் நியூசிலாந்தில் இருக்கும் என் பெரியம்மா பிள்ளைகள் (ஈழத்தமிழருக்கு தமிழகம் பெரியம்மா தானே 😉 துளசிம்மா, கொரியாவில் இருந்து நா.கண்ணன், நெல்லைக்கிறுக்கன் ஆகியோர் சிட்னி வந்தபோதும் இங்கேயுள்ள பதிவர்களோடு ஒரு சந்திப்பு அதை சிட்னி வலைப்பதிவர் சந்திப்புக்கள் என்ற பதிவில் இட்டிருக்கின்றேன்.

கடந்த ஆண்டு தாய்லாந்தில் நண்பர் மாயவரத்தானைச் சந்தித்தது பாங்கொக் மாரியம்மன் ஆலயத்தில் மாயவரத்தான் தரிசனம்

இரண்டு முறை சிங்கப்பூரில் பாசக்காரப் புள்ளைங்களோட சிங்கப்பூரில் எஞ்சிய நாட்கள்
சிங்கப்பூரில் நடந்த திடீர் பதிவர்சந்திப்புக்கள் மறக்கமுடியாத இனிப்பான நினைவுகள்.

இப்படி உலகம் சுற்றிப் பதிவர் சந்திப்பை நடத்தியிருந்தாலும் எம் தாயகத்தில் பதிவர் சந்திப்புக்கள் நடக்கு போதெல்லாம் வில்லன் பிரகாஷ்ராஜ் கணக்காய் மனசுக்குள் கறுவிக் கொண்டிருந்தேன் பெரும் ஆதங்கத்துடன். அந்த ஆதங்கம் ஓரளவு நிறைவேறும் வகையில் அமைந்தது இந்த ஆண்டு என் தாயகப்பயணத்தில்

கறுப்பியைக் கண்டேன்
ஒரு நாள் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்குப் போய் காலைப்பூசை முடித்து வீட்டுக்கு வந்து என் செல்போனில் இருக்கும் ஒரு நம்பரை அழைக்கிறேன். நேரம் காலை 8 மணி இருக்கும்.
“ஹலோ கறுப்பி! என்ன செய்யுறீர்” இது நான்
“ஹலாஆஆஆவ் (கொட்டாவி) யார் பேசுறீங்க” இது நித்திரைப்பாயில் இருந்து கறுப்பி
“நான் கானா பிரபா, இப்ப யாழ்ப்பாணத்தில தான் நிக்கிறன்” – நான்
“என்ன விளையாடுறீங்களா? நீங்கள் யார் சொல்லுங்கோ மரியாதையா” இது தூக்கக் கலக்கத்தில் கறுப்பி
“யோவ்! நான் தானய்யா கானா பிரபா”
“போங்கண்ணன் விளையாடாதேங்கோ, நீங்களாவது யாழ்ப்பாணத்திலாவது”
“என்ன கொடுமை கறுப்பி, சந்தேகம் இருந்தால் நாளைக்கு யாழ்ப்பாணம் ரவுணில் சந்திப்போமா”
“சரி ஒகே” நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடு கறுப்பி. எனக்கும் இது கறுப்பியா அல்லது யாராவது கேஸ் ஆ என்றும் ஒரு சந்தேகம் பயத்தோடு.

அடுத்த நாளும் காலை வேளை அழைக்கிறேன்.
“அண்ணன் நான் பருத்தித்துறையில் இருந்து பஸ்ஸில் வாறன் எனக்கு 1 மணித்தியாலம் தாங்கோ”
சரியென்று விட்டு லுமாலா குதிரையில் ஏறு யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறேன். கறுப்பி சொன்ன நேரக்கணக்கு வரும்போது யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு அருகே இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருக்கும் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் தான் அருகில் நிற்பதாகச் சொல்லி போனில் அழைத்தார். தூரத்தில் இருந்து சிம்பு ரேஞ்சில் ஒரு பையன் வந்து கொண்டிருந்தார். (கறுப்பி, நீர் சொன்னது போல உயர்த்திச் சொல்லிட்டன் ஓகே தானே 😉
அதுதான் கறுப்பி என்று ஒரு ஊகத்தில் நான் சிரிக்க அவரும் சிரிக்க.. கைகுலுக்கிக் குசலம் விசாரித்தேன்.

கறுப்பியின் ஒரு கவர்ச்சிகரமான தோற்றம்

“அண்ணன், நீங்கள் அப்பிடியே தான் இருக்கிறியள்” ஏதோ 10 வருசம் பழகினவை மாதிரி கறுப்பி சொன்னார். சிரித்துக் கொண்டே “கொசி ரெஸ்டோரண்ட் போவோமா ஓடர் குடுத்து 1 மணித்தியாலம் கழிச்சுத் தான் சாப்பாடு வருமாம் அந்த இடைவெளியில் கதைக்கலாம் ” என்று நான் சொல்லவும் கறுப்பி தலையாட்டினார். பஸ் நிலையத்தில் இருந்து சிறீதர் தியேட்டர் எல்லாம் தாண்டி அந்த வேகாத வெயிலில் கறுப்பி நடக்க நான் சைக்கிளில் எத்தி எத்திப் பாய்ந்து கொசி உணவகம் போனோம்.

கொசி உரிமையாளர் சுந்தர் அந்த நாளிலை எங்களோட ஒளிச்சுப் பிடிச்சு எல்லாம் விளையாடின காய் இப்ப பெரும் பிசினஸ் புள்ளி. எனவே பழைய ஞாபகங்களை இறுக்கி உள்ளே வைத்து விட்டு சுந்தரைக் கண்டு மரியாதையான சிரிப்பை உதிர்த்துவிட்டு உணவகத்திற்குள் பாய்ந்தோம்.

ஆயில்யன் தொடங்கி அண்டம் வரை கிட்டத்தட்ட 2 மணி நேரமாக நிறையப் பேசினோம். தான் வலையுலகிற்கு வந்த கதையில் இருந்து நவீன இலக்கியம், புனைவு (இதைப் பற்றி நிறையவே) எல்லாம் பேசினார் கறுப்பி. கறுப்பி என்ற பதிவராக மட்டுமன்றி உடன்பிறவாச் சகோதரனாக அவரைச் சந்தித்தது பேசியது எல்லாமே இனிமையான கணங்கள். கொசியில் சாப்பிட்டு விட்டு இருபது நிமிடங்கள் வரை மீண்டும் பஸ் நிலையம் நோக்கி நடந்தோம். வழியில் சிறீதர் தியேட்டரில் சென்றியில் இருந்த ஆமிக்காறன் என் சைக்கிளுக்குக் கல் எறிந்து பழகினான். “நேரம்டா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெளியே அசட்டுச் சிரிபோடு நானும் கறுப்பியும் நடையைத் தொடர்ந்தோம். கடைத்தெருக்களில் உலாவிய பின்னர்
“அண்ணன், கொழும்பில் பதிவர்களைச் சந்திக்கிறீர்களா, எப்ப எண்டு சொல்லுங்கோ உங்களோட துணையா நானும் வாறன்” இது கறுப்பி விடைபெறும் போது.

கொழும்பில் நடந்த அமைதிச் சந்திப்பு

எனது தாயகப்பயணம் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டுக் குறுகிய காலமாக இருந்ததால் கொழும்பில் இருக்கும் பதிவர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் கொழும்பு வந்ததும் இருக்கும் 2 நாட்களில் ஒரு சிலரையாவது சந்திப்போம் என்று எனது மின்னஞ்சல் தொடர்பில் உள்ள ஆதிரை, லோஷனுக்கு மெயில் போட்டேன். “எல்லோரையும் அழைத்து ஒரு சந்திப்பை நடத்துவோமா?” என்று லோஷன் மயிலை அனுப்பினார். “இந்த முறை வேண்டாம் அடுத்த முறை வைத்துக் கொள்வோமா” என்ற என் கோரிக்கையைச் செவிமடுத்து ஞாயிற்றுக் கிழமை காலிமுகத்திடலில் சந்திக்க ஏற்பாடானது. அங்கே தான் சனிபகவான் உள்ளூரச் சிரித்துக் கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை எழில்வேந்தன் அண்ணாவைச் சந்தித்தேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு. அவரின் காரில் இருந்து கொண்டே கார் கொழும்பு வீதிகளை எல்லாம் அலைந்து திரிய நம் பேச்சுக்கச்சேரியை நடத்தினோம். எழில் அண்ணாவை வைத்துக் கொண்டு தான் என் வானொலி வாழ்க்கையில் பல காரியங்களைச் செய்து முடித்தேன். அந்த வகையில் இவரின் சந்திப்பு அவசியமானதாகப்பட்டது. இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் குறிப்பாக எமது ஈழத்தின் இலக்கிய ஆளுமை கவிஞர் நீலாவணனின் கவிதைகளை முழுமையானதொரு தொகுதியாகக் கொண்டு வருவதன் மூலம் பல்கலைக்கழக மட்டத்தில் எமது அடுத்த தலைமுறை தன் ஆராய்ச்சிப் பணிகள் செய்யவும் மற்றும் சாகாவரம் பெற்ற படைப்பாகப் பேணிப்பாதுகாக்க முடியும் என்ற அவர் கருத்தோடு முழுமையாக் உடன்பட்டுக் கொண்டேன். “நீலாவணன் அறக்கட்டளை” என்ற ஒன்றை நிறுவி நம் உறவுகள் சிறுகச் சிறுக உதவினாலே இதை வெகு விரைவாகச் செய்ய முடியும் என்று முடிவு கட்டினோம். இந்தப் பணி இப்போது நம் எல்லோர் கைகளிலும். கார் எம் சந்திப்பைச் சொகுசாக்கி முடிவில் பம்பலப்பிட்டியில் நிறுத்தியதது.

காலையிலேயே எழில் அண்ணா சொன்னவர் “கோல்பேசிலா பதிவர் சந்திப்பு, உருப்பட்ட மாதிரித்தான் ஞாயிற்றுக்கிழமை வேற” என்ற அவர் கூற்றைச் சனீஸ்வரன் மெய்ப்பித்தான்.
ஐந்து மணிக்கு காலிமுகத்திடலுக்கு வருவதாக இருந்த லோஷன் குழுவைக் காணவில்லை. கோல்பேசில் கூட்டம் கும்மியது. பிலாக்கொட்டைப் பொரியலை வாங்கிக் கொறித்துக் கொண்டே போறவாற சனத்தையும், கடலையும், பட்டத்தையும் படம் எடுத்துப் பொழுதைப் போக்கினேன்.
“பிரபா அண்ணா! பார்க்கிங் பிரச்சனையா இருக்கு கோல் றோட்டில் நிற்கிறம், வேறை எங்கையாவது போவமா” என்று லோஷன் கேட்க
“சரி அங்கேயே நில்லுங்கோ வாறன்”
வெள்ளை வானில் (!) லோஷனும், கூடவே கடலேறி ஆதிரையும், இன்னொரு சிரிப்புத் தம்பி அவர் தான் கன்கொன்.
“விகாரமாதேவி பூங்கா போவோமா” – ஆதிரை
இவர் என்ன தொட்டதுக்கெல்லாம் விகாரமாதேவி பூங்கா போவோமா எண்டு கேக்கிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே
“ஐயோ இன்னொரு பார்க்கா, வேண்டாமய்யா வெள்ளவத்தையில் இருக்கும் கொசி றெஸ்டோரண்ட் போவோமா” – இது நான். (ஏண்டா யாழிலும் கொசி கொழும்பிலும் கொசியா எண்டு அலுக்காதேங்கோ)
லோஷனும் ஆமோதிக்க, வெள்ளவத்தை ஸ்ரேசன் ரோட் இல் இருக்கும் கொசிக்கு வான் பயணித்தது.
இந்த வேளை யூகேயில் இருந்து எமது வந்தியத்தேவன் லோஷனின் மொபைலுக்கு அழைத்தார். வந்தியுடன் முதன் முதலில் போனில் பேசுகிறேன், நிறையப் பேசினோம். எனது வலையுலக வாழ்வில் முதல் இலங்கை வாசகர், என் மாம்பழப்பதிவுக்காக கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தைத் தேடிப்பிடித்துப் படம் எடுத்து அனுப்பியவர். அன்றிலிருந்து இன்று வரை வந்தி மீதான என் நேசம் குறையவில்லை என்றாலும் சமீபத்தில் அவரது எந்திரன் படப்பாடல்கள் குறித்த விமர்சனம் அவரின் இலங்கை வாசக மட்டத்தில் சுனாமியாகத் தாக்கிக் கொண்டிருப்பதை அங்கிருக்கும் போது கேட்டு மனம் வெதும்பினேன் 😉 நம்புங்க வந்தி நம்புங்க

சூப் குடித்துக் கொண்டே எம் பதிவர் சந்திப்பு நடந்தது.
லோஷன் வானொலிப் பணிக்கு வந்த காலம் தொட்டே அவரை நான் அறிந்து வைத்திருக்கிறேன். எம் ஊர்க்காரர் என்ற பெருமை வேறு. ஆனால் இது தான் முதல் சந்திப்பு. இவரின் பதிவுகள் போலவே ஆளும் நேரில் கல கல. கிறிக்கெற் இல்லாவிட்டால் ஆளின் மூச்சு நின்று விடும் என்பதை சந்திப்பில் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டேன்.

கடலேறி பதிவுக்குச் சொந்தக்காரர் ஆதிரை தம்பி, இவர் பதிவில் நிறையப் பேசினாலும் நேரே கூச்சமோ என்னவோ கேட்ட கேள்விக்கு மட்டும் இமிகிறேஷன் இன்ரவியூ மாதிரிப் பேசினார். பின்னர் சந்திப்பு சூடு பிடிக்கவோ அல்லது சூப் தந்த தெம்போ மெல்ல மெல்ல பேச்சுக்கச்சேரியில் முழுமையாக ஐக்கியமானார்.

கன்கொன் இவரை “ஆம்பிளை சினேகா” என்று சொல்லப் போறன். அதற்காக முதலில் மன்னிப்புக் கோருகிறேன். பின்னை என்ன, வந்த நேரம் தொடங்கி ஒரே புன்னகை புன்னகை புன்னகை புன்னகையைத் தவிர இவரிடம் ஒரு கேள்விக்குப் பதில் வாங்குவதற்குள் சீவன் போய்விடும் பாருங்கோ. தம்பி கன்கொன் அடுத்த முறை சந்திப்பிலாவது நீங்கள் நிறையக் கதைக்க வேணும் சொல்லிப்போட்டன்.

கறுப்பி இந்தச் சந்திப்புக்கு வரமுடியவில்லை என்று மனம் வருந்தி யாழில் இருந்து மெயில் அனுப்பினார்.

என் தாயகப்பயணம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அமைந்தது. இந்த இடைவெளியில் வலைப்பதிவு எழுதும் இலங்கைப் பதிவர்கள், மற்றும் என் பதிவுகளை வாசிக்கும் உறவுகள் (ரவீந்திரன் அண்ணர் உட்பட) என்று நிறையப் பேரைச் சம்பாதித்தாலும் இந்தப் பயணத்தில் இவர்கள் எல்லோரையும் சந்திக்காதது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. அதற்காக மிகவும் வருந்துகின்றேன்.
கண்டிப்பாக என் அடுத்த பயணத்தில் நாம் சந்திக்க வேண்டும் என் சகோதரங்களே

இன்னொரு யாழ்ப்பாணத்துப் புதினமும் இருக்கு , பிறகு சந்திக்கிறன்

31 thoughts on “இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு”

 1. தூய்ஸ்

  கறுப்பி ஒரு புனைவு, அவ்வளவு தான் சொல்லுவேன் மேற்கொண்டு கேட்காதேங்கோ 😉

 2. அடுத்தமுறை பார்க்கலாம் அண்ணா (நான்கு வருடம் கழித்தா?)

  கறுப்பி – யாழ்ப்பாணமா?

 3. எல்லா இடமும் சொல்லியிட்டியள். ஏன் சிட்னியில ஒரு வலைப்பதிவர் சந்திப்பும் நடக்கேல்லையோ.

  பி.கு.(திட்ட வேண்டாம்).

 4. //மேற்படம் காலிமுகத் திடலில் கொழும்புப் பதிவர்களுக்காக காத்திருக்கும் போது கமராவால் சுட்டது.//

  சுட்டதில் சூப்பர் ! 🙂 நல்லா இருக்கு போட்டோ

  //ஹலாஆஆஆவ் (கொட்டாவி) யார் பேசுறீங்க" இது நித்திரைப்பாயில் இருந்து//

  அப்பிடியே பழகிட்டாரய்யா ! இங்கே எப்பொழுதுமே நித்திரை அங்கே ஊர் சென்ற பிறகு பயணம் பயணம் என்று தினமும் களைத்து போய் காலையில் வந்து உறங்குபவரை அதுவும் நடுராத்தி நேரத்திலா தொலைபேசி தொல்லைதரவேண்டும்!

  கண்டனங்கள்

  கறுப்பி பேரவை
  தோஹா – கத்தார்

 5. //ஒரு பையன் வந்து கொண்டிருந்தார். (கறுப்பி, நீர் சொன்னது போல உயர்த்திச் சொல்லிட்டன் ஓகே தானே ;)//

  ரொம்ப உயர்த்திட்டேள் ரொம்ப உயர்த்திட்டேள் அமிதாப்பச்சன் ரேஞ்சுக்கு!:)

 6. //கறுப்பியின் ஒரு கவர்ச்சிகரமான தோற்றம்///

  அந்தா தூரத்துல போற ரெண்டுசக்கரவண்டி + ஓட்டுகிற ஒரு மனிதர் தெரியறாரு

  வெள்ளை வேன் தெரியுது பக்கத்துல பச்சை ஆட்டோ தெரியுது கருப்பு கலர் ப்ளசர் கார் தெரியுது அது முந்திக்கிட்டு நடந்து வர்ற மனுசங்க தெரியறாங்க கிட்டத்தில 3 இரு சக்கர வாகனம் தெரியுது ஆனாஆஆஆஆஆஆஆஆ எனக்கு கறுப்பி மட்டும் தெரியல்யே ராசாஆஆஆஅ! #டொண்டடொண்டடொண்டடாய்ங்ங்ங்ங்க்ங்க்

 7. //அந்த வேகாத வெயிலில் கறுப்பி நடக்க நான் சைக்கிளில் எத்தி எத்திப் பாய்ந்து கொசி உணவகம் போனோம். //

  சென்று தின்று விழாவினை சிறப்பித்து வந்தேன் ரேஞ்சுக்குள்ளா பயமக்கள் ப்ளான் பண்ணியிருக்குதுங்க !

 8. //ஆயில்யன் தொடங்கி அண்டம் வரை கிட்டத்தட்ட 2 மணி நேரமாக நிறையப் பேசினோம்.//

  ஆஹா ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க ! நான் சொன்ன மேரியே நடந்துப்போச்!
  அதிருக்கட்டும் தட்டுநிறைய சாப்பாடு இருக்க ஏன் என் தம்பிஅம்புட்டு பாவம்/சோகமா பாக்குது யாருன்னாச்சும் காசு கொடுத்துட்டு சோத்துல கை வையுங்கடாப்பான்னு மிரட்டிட்டாங்களா?

 9. //"நீலாவணன் அறக்கட்டளை" என்ற ஒன்றை நிறுவி நம் உறவுகள் சிறுகச் சிறுக உதவினாலே இதை வெகு விரைவாகச் செய்ய முடியும் என்று முடிவு கட்டினோம்//

  வாழ்த்துகள் ஈழத்து முற்றம் போல் இதுவும் வெற்றிகரமாகட்டும்!

 10. //கன்கொன் இவரை "ஆம்பிளை சினேகா" என்று சொல்லப் போறன்///

  பயபுள்ள வந்ததுலேர்ந்து சிரிச்சுக்கிட்டே இருக்குதுன்னு நீங்க நினைச்சிருப்பீங்க! பட்ஷே உம்மை பார்த்ததும் அவுருக்கு சிரிப்பு சிரிப்பா வந்திருக்கும்போல :))))))))))

  ஆமாம் அது ப்ளாக்கர் /டிவிட்டர் சந்திப்புன்னு சொல்லலாம் லோஷன் அண்ணா ஆதிரையார் & கன்கொன் டிவிட்டர் க்ரூப்புய்யா :))

 11. நாலு வருசத்திற்கு பிறகு.. இங்க வரேக்க என்னையும் மறந்திராம ஒரு சந்திப்புக்கு..;)

 12. கறுப்பி ஸ்டைலாகத் தான் இருக்கின்றார்.
  அண்ணை நான் எந்திரன் படப்பாடல் விமர்சனத்தை தனிப்பதிவாகத் தான் போட நினைத்தேன், நல்ல காலம் தப்பிவிட்டேன் போட்டிருந்தால் லண்டனில் குறூப் வைத்து அடித்திருப்பார்கள் பாசக்காரப் பிள்ளையள். அதுதான் அடுத்த கிழமை ஒரு மறுப்பறிக்கை போட்டு தப்பிவிட்டேன்.

  எங்கள் கறுப்பு நமீதாவை சினேகாவுடன் ஒப்பிட்டமைக்கு கண்டனங்கள்.

  ஆதிரை ஈமெயிலில் மட்டும் நல்லாக் கதைப்பார் நேரில் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்.

  லோஷன் கொஞ்சம் மெலிந்ததுபோல் தெர்கின்றார் ஹிஹிஹி.

  நல்ல பதிவு பழைய பதிவுகளையும் நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்.

  உண்மைதான் இவ்வளவு நாளும் நாங்கள் எத்தனையோ கதைக்க கூடிய வசதிகள் இருந்தும் ஏனோ கதைக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. ஆனாலும் உங்கள் குரல் அடிக்கடி கேட்டிருக்கின்றேன்.

  பின்குறிப்பு : தூயா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.

 13. தல கோபி

  கறுப்பி ஒரு குண்டுப் புனைவு 😉

  சுபாங்கன்

  இனிமேல் 4 மாதத்திலேயே வரலாம் 😉 கண்டிப்பாக சந்திப்போம் நல்லூரிலோ கொழும்பிலோ

 14. வாங்க முத்துலெட்சுமி

  கனவில் பாதி நிறைவேறிவிட்டது 😉

  கலை

  நீங்களே திட்டவேண்டாம் எண்டு சொல்லியாச்சு பிறகேன் கிளறுவான் 😉 சிட்னியில் நடந்த ஏனைய சந்திப்புக்களைப் போட்டிருக்கிறேனே

 15. ஆயில்ஸ்

  உங்க பதிவுக்கு sorry பின்னூட்டத்துக்கு நன்றி 😉

  கறுப்பி என்மேல் சந்தேகப்பட்டதற்கு காரணம் முன்னர் இப்படித் தான் யாரோ மங்களூர் சிவா மாதிரிப் பேசி கலாய்ச்சாங்களாம்

 16. அட அட அட..
  எத்தனை விஷயம் ஒரு பதிவுக்குள்..

  முதல் படம் கலக்கல்.

  வந்தியின் எந்திரன் குட்டை அப்படியே முழுமையா உடைச்சிட்டீங்களே..

  // "நீலாவணன் அறக்கட்டளை" என்ற ஒன்றை நிறுவி நம் உறவுகள் சிறுகச் சிறுக உதவினாலே இதை வெகு விரைவாகச் செய்ய முடியும் என்று முடிவு கட்டினோம். //
  நல்லது

  வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு ஆளுக்கு ஆள் மாறி,மாறித் தேடியதை மறந்திட்டீங்களே அண்ணே..

  //கிறிக்கெற் இல்லாவிட்டால் ஆளின் மூச்சு நின்று விடும் என்பதை சந்திப்பில் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டேன். //

  🙂
  ஐயோ வெக்கமா இருக்கு.. 😉

  //இவரை "ஆம்பிளை சினேகா" என்று சொல்லப் போறன்//
  அதெல்லாம் முடியாது.. கறுப்பு நமீதா என்ற பட்டம் என்னாவது?
  அடுத்த முறை சொல்லீட்டு வாங்கோ.. பதிவர் மாநாடு ஒன்றே நடத்துவோம்.

 17. //பின்குறிப்பு : தூயா என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.//

  அண்ணோவ்வ்வ்வ்வ் நீங்க இப்படி கேட்ட நேரம் அவுங்க மெயில்ல செங்கல் அனுப்பிகிட்டிருக்காங்க சாக்கிரதைய்ய்ய்ய்ய்ய் 🙂

 18. அண்ணா உங்களைச் சந்தித்தது, இளையராஜா முதல் இந்திய வங்கிகள் வரை தரவுப்புத்தகமாய் எங்களுடன் பகிர்ந்தவை… எல்லாமும் அருமை!!!

  //ஆமாம் அது ப்ளாக்கர் /டிவிட்டர் சந்திப்புன்னு சொல்லலாம் லோஷன் அண்ணா ஆதிரையார் & கன்கொன் டிவிட்டர் க்ரூப்புய்யா :))//
  ஆயில்ஸ்… 🙂

 19. sinmajan said…

  நாலு வருசத்திற்கு பிறகு.. இங்க வரேக்க என்னையும் மறந்திராம ஒரு சந்திப்புக்கு..;)//

  ஆகா சின்மயன் என்னை வச்சு காமடி கீமடி பண்ணலியே 😉

  நாலு மாதத்திலேயே வாறன் சந்திப்போம் 😉

 20. வருகைக்கு நன்றி வந்தி, இருந்தாலும் எந்திரன் உங்களைப் பிரிச்சு மேஞ்சுட்டுது 😉

  லோஷன்

  வெக்கப்படக்கூடாது உண்மையைத் தான் சொல்லுவோம்ல

  ஆதிரை

  😉 நன்றி

  ♥ தூயா ♥ Thooya ♥ said…

  I am too busy building a home for my displaced panni kuttiz… kikikiki//

  பயபுள்ளை பேஸ்புக்கில் என்னமாய் ஈடுபாடு 😉

  வாங்கோ கதியால்

  கொஞ்ச நாளைக்குள்ளை எல்லாம் கவர் பண்ணியாச்சு 😉

 21. கொஞ்ச நாட்களுக்க ஓடியோடி எத்தினை அலுவல் பார்திருக்கிறிங்கள் பாராட்ட வேணும். களைப்பு இல்லையாப்பா!!!!!

 22. ஹி ஹி… 😉
  அடுத்த முறை கதைக்கிறேன். 🙂

  உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி…

  // ஆதிரை said…

  அண்ணா உங்களைச் சந்தித்தது, இளையராஜா முதல் இந்திய வங்கிகள் வரை தரவுப்புத்தகமாய் எங்களுடன் பகிர்ந்தவை… எல்லாமும் அருமை!!! //

  வழிமொழிகிறேன். 🙂

 23. அருமையான ஒரு அனுபவப் பகிர்வு… எனக்கு ஏதோ ஒன்றை தவற விட்டுவிட்டேன் போல இருக்கிறது… பரவாயில்லை.. ஒரு சந்தர்ப்பம் வரும்..

 24. yarl said…
  கொஞ்ச நாட்களுக்க ஓடியோடி எத்தினை அலுவல் பார்திருக்கிறிங்கள் பாராட்ட வேணும். களைப்பு இல்லையாப்பா!!!!!
  //

  😉 ஊருக்குப் போனா களைப்புப் போய் விடும் அக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *