“16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” – போக முன்

இன்று உலகளாவிய ரீதியில் இணையம் அறிமுகப்படுத்திய நாள் (நவம்பர் 13, 1990)சுபயோக சுப தினத்தில் ஒரு தொடரை ஆரம்பிக்கலாமே என்று முனைப்போடு வந்திருக்கிறேன். இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே 😉

1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன். இந்து நாகரீக பாடம் ஆரம்பமாகும் நேரமது. சற்று முன்னர் இடைவேளை மணி நேரம் முடிந்தாலும் ஃபாதரின் கன்ரீனை விட்டு விலகி வரவிரும்பாமல் கூட்டாளிமார் ராசனும் விக்கியும் அங்கேயே நிக்கிறாங்கள் போல. நான் வகுப்பின் மொனிட்டர் ஆச்சே, விரும்பியோ விரும்பாமலோ வந்து வாங்கில் குந்தி இருக்க வேண்டிய நிலையில் என் கதிரையில் போய் இருக்கின்றேன். பக்கத்துக் கதிரையில் இருந்து ஒரு இயக்கம் சம்பந்தமான ஏதோ ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றான் பேரின்பன். இவன் விடுதலைப் புலிகளின் மூதூர் பிராந்திய தளபதியாக எண்பதுகளில் இருநது வீரச்சாவடைந்த மேஜர் கணேஷ் இன் தம்பி. திருகோணமலையில் இருந்து மேல் வகுப்புப் படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான். முஸ்லீம் மகாவித்தியாலயம் பக்கமாக இருக்கும் ஒரு வீட்டில் தான் தங்கி இருந்து படிக்கின்றான். பொதுவாக யாரோடும் அதிகம் பேசமாட்டான். கேணல் குமரப்பா மாதிரி இருக்கும் தடித்த மீசை ஆனால் செக்க சிவந்த மலையாளி போல கன்ன உச்சி பிரித்து வாரப்பட்ட தலையுமாக அவனே ஒரு போராளியின் மிடுக்கில் இருப்பான்.அவனையும் ரியூசன் வகுப்பில் ஒருத்தி துரத்தித் துரத்திக் காதலித்தாள், ஆள் மசிந்தால் தானே.
ஏனோ தெரியவில்லை மற்ற நண்பர்களை விட என்னோடு மட்டும் உரிமையெடுத்துப் பழகுவான். வாசிப்புக்கு கம்பெனி கொடுக்கும் தோழன் அவன்.

“என்ன மச்சான் பிரபு எழுதிக்கொண்டிருக்கிறாய்” என்னைப் பார்த்துக் கேட்கின்றான். (பிரபு என் செல்லப் பெயர்). இந்து நாகரீகம் எடுக்கும் ரீச்சர் திருமதி நாகேஸ்வரன் வரும்வரைக்கும் எழுதிக் கொண்டிருந்த அந்த எழுத்துப் பதிவைக் காட்டுகின்றேன் அவனுக்கு. அந்தக் கதை அப்போது என்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வைத்து எழுதிய ஒரு கதையின் கால் பங்கு. “தொடர்ந்து எழுது மச்சான் நான் ரைப் பண்ணித் தாறன்
என்று சொன்ன பேரின்பன் ஆர்வமாக அதைப் படிக்கத் தொடங்கினான்.

எனது கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில் ஓய்ந்தது அந்தக் காதல் கதை எழுதும் படலம். அவனும் ஒவ்வொரு அத்தியாயமாக ரைப் பண்ணிக் கொண்டு வந்து காட்டுவான். அப்போதெல்லாம் கணினியே இல்லாத காலம். ரைப்ரைட்டர் மூலமாகவே அவன் தட்டச்சிக் கொண்டு வந்தான். கற்பனையும் நிஜமும் கலந்த அந்தக் கதை முடிந்த போது அதை பைண்ட் பண்ணி எனக்குப் பரிசாகவே தந்தான். அப்போது அதற்கு நான் சூட்டிய பெயர் “மண்ணில் இந்தக் காதல் இன்றி” (கேளடி கண்மணி படம் வந்தபோது ஏற்பட்ட பாதிப்பு 😉

மேற்படம் : பேரின்பன் அப்போது ரைப்ரைட்டரில் தட்டாச்சித் தந்த ஒரு அத்தியாயம்

மூன்று வருஷங்களுக்கு முன்னர் நான் தாயகம் போனபோது அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரே மக்கு வாசனை வீசிய அந்தப் புத்தக அறையைத் திறந்து “மண்ணில் இந்தக் காதலின்றி” என்ற அந்த காதல் கதையைத் தேடினேன். பலத்த தேடலில் லேசான மழை ஒழுக்கு ஓரமாக ஒட்டியிருந்த சுவடோடு பேரின்பன் அன்று எனக்கு பைண்ட் பண்ணித் தந்த என் காதல் கதைப் பதிவு கிட்டியது. எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.
ஆனால் பேரின்பன் என்னவாகியிருப்பான், இயக்கத்துக் போயிருப்பானா, கல்யாணம் முடிச்சு நாலைந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாகியிருப்பானா? தெரியவில்லை 🙁

“மண்ணில் இந்தக் காதலின்றி” என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்
“16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” என்று……

பிற்குறிப்பு:
இந்தத் தொடருக்காக முகப்புப் படம் செய்ய பல நாட்கள் என்னிடம் கஷ்டப்பட்ட ஆயில்யனுக்கு சிறப்பு நன்றிகள்

34 thoughts on ““16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை” – போக முன்”

 1. ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  உங்க காதல் கதை இதுல வருமா?

  இல்ல இதுலயே தனியா கிளை விட்டு போவுமா?

  ஒவர் பில்ட் அப் கொடுத்துட்டு கடைசியல எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கற தொனியில இருக்கிற இந்த காதல் கதையில சஸ்பென்ஸா இருக்குமா இருக்காதா? :)))

 2. என்ன கானாஸ்…உங்களை கலாய்க்கலாம்னு வந்தால்…இப்படி மனசை சோகமாக்கி போட்டியள்!! பேரின்பன் (நல்லாருக்கு பெயர்!!) நல்லபடியாக இருக்க விரும்புகிறேன்!!

 3. சரி, பேரின்பன் கண்டிப்பாக நல்லா இருப்பார் என்ற நம்பிக்கையோடு ..அந்த கதையை சீக்கிரம் சொல்லுங்க…:)கடல் கடந்த திரைகாவியம் அல்லவா அது!! :)))

 4. டிவீ சீரியல்களில் கிளைக்கதை வாற மாதிரி வாசகர்களையும் கிளைக்கதை எழுத விடலாமே..கனக்க ”இளவுகள்” சொறி ”லவ்வுகள்” வெளியில வரும் பாருங்கோ.

  என்னட்டயும் அப்படி நாலைந்து இருக்கு..

  எடுத்து விடலாம் என்று நினைக்கிறன். பெயர், ஊர், விலாசம் எல்லாம் மாத்தித் தான் எழுத வேணும், இல்லாட்டி நான் வீட்ட போக ஏலாது பாருங்கோ!

 5. விசரன் said…

  டிவீ சீரியல்களில் கிளைக்கதை வாற மாதிரி வாசகர்களையும் கிளைக்கதை எழுத விடலாமே..கனக்க ”இளவுகள்” சொறி ”லவ்வுகள்” வெளியில வரும் பாருங்கோ. //

  அண்ணை நீங்க எங்கையோ போயிட்டீங்கள், ஆனா உங்களை எழுத விடமாட்டேன் ;-)))

 6. தலைப்பை பார்த்து ஓவர் ஆர்வமாக வந்துட்டன்.தோழர் வடிவில் தான் நீங்கள் இருப்பீர்களா?
  இந்த கதையில் உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் விறுவிறுப்பாக இருக்குமே.

 7. //தமிழ் பிரியன் said…

  அப்ப இதுல உண்மைக்கதை (?) எல்லாம் வருமோ… ஹிஹிஹி.. ;-)))//

  உண்மை சொன்னால் நேசிப்பாயா? :))))

 8. //எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.//
  அப்ப நீங்கள் குடுத்து வைத்தவர் தான்.
  எனக்கு இடம்பெயர்ந்து 10 வருடத்துக்கு பின் தான் வீட்டுக்கு போக சந்தர்ப்பம் வந்துது.
  வெறும் வீடு மட்டும் தான். கறையான் பிடித்து போய்.
  ஆசையாய் சேர்த்து வைத்த பழைய கால புத்தகங்கள், album எல்லாமே தொலைந்து விட்டது.
  ஒரு photo கூட இல்லை.
  நான் சின்னனில எப்படி இருந்தன் என்றே தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களன்.

 9. //சந்தனமுல்லை said…

  என்ன கானாஸ்…உங்களை கலாய்க்கலாம்னு வந்தால்…இப்படி மனசை சோகமாக்கி போட்டியள்!!/

  ஈழத்துமுற்றம் வந்து வந்து ஆச்சிய இப்படி ஆக்கிப்புட்டியளே :))))

 10. //Blogger வாசுகி said…

  தலைப்பை பார்த்து ஓவர் ஆர்வமாக வந்துட்டன்.தோழர் வடிவில் தான் நீங்கள் இருப்பீர்களா?
  இந்த கதையில் உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் விறுவிறுப்பாக இருக்குமே.//

  சுவாரஸ்யமாக இருக்ககூடும் !

  விறுவிறுப்பாக இருக்குமளவுக்கு அடி வாங்கிய கதையெல்லாம் சொல்லுவாரா என்று தெரியவில்லையே? :))))))))))))

 11. முக்கிய குறிப்பு வுட்டுபோச்சு;

  ஸ்கூலேர்ந்து வெளியே சைக்கிளில் காதலியை காண வெகுவேகமாய் செல்வது உங்கள்

  கானா பிரபா!
  கானா பிரபா!!
  கானா பிரபா!!!

 12. // `மழை` ஷ்ரேயா(Shreya) said…

  மிஸ். செல்லையாவுக்கு இதெல்லாம் தெரியாது போல? உம்மை நல்ல பிள்ளையெண்டெல்லா அவ நம்பிக் கொண்டிருக்கிறா?/

  வரலாற்றில் இதெல்லாம் சகஜம்தான் :)))

 13. //மழை` ஷ்ரேயா(Shreya) said…

  ஒன்டுமே சொல்லுறதா இல்ல. :O))//

  பாஸ் இவுங்க சொல்லியிருக்கிற கமெண்ட் – அடக்கடவுளே என்னாத்த சொல்றது கலிகாலம் – இந்த ரைமிங்கல வருமா? :)))))

 14. //1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன்//

  என்ன ஒரு 4 அல்லது 5 வயசு இருக்குமா பாஸ் அப்ப உங்களுக்கு?

 15. \1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு)\

  ஆகா..தல 1993ல பல்கலைக்கழகமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  சொல்வேல்ல…!! 😉

 16. \ஆயில்யன் said…
  //1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன்//

  என்ன ஒரு 4 அல்லது 5 வயசு இருக்குமா பாஸ் அப்ப உங்களுக்கு?

  அண்ணே இதெல்லாம் ஓவரு..அப்படின்னா நான் பொறக்கவேல்லியா!!?? ;))

 17. \மண்ணில் இந்தக் காதலின்றி" என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்
  "16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை" என்று……\

  ஆகா..ஆகா…சூப்பரு தல….தல உலத்தல் மாதிரி ஆக்கிடாதிங்க ;))

  போடுங்கள் கலக்கிடுவோம் ;))

 18. ம்ம்ம்….போகப் போக இன்னும் சுவாரசியமாக இருக்கும். தாய்மண்ணின் வாசனை கண்டிப்பாக இருக்கும். ம்ம்ம் தொடருங்கள்…!!!

 19. இதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க மடத்துவாசல் பிள்ளையார் அருள்பாலிக்கப் பிராத்திக்கிறேன்..

 20. //ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)//

  எப்பிடியோ நீங்கள் கதையில இருக்கிறீங்கள் தானே ?

  16வருசத்துக்கு முந்தின கதையை 16வருசம் கழிச்சு எழுதேக்க இன்னும் நிறைய காலங்கடந்த ஞானப்பட்டறிவும் இருக்குமல்லவா.

  கடைசியில் இது கதைதான் நிசமல்ல என்று பொய் சொல்லக்கூடாது சரியோ ?

  சாந்தி

 21. Blogger விசரன் said… என்னட்டயும் அப்படி நாலைந்து இருக்கு..

  எடுத்து விடலாம் என்று நினைக்கிறன். பெயர், ஊர், விலாசம் எல்லாம் மாத்தித் தான் எழுத வேணும், இல்லாட்டி நான் வீட்ட போக ஏலாது பாருங்கோ!

  November 13, 2009 9:31 PM

  அவ்வளவு பயந்த வீரனா நீங்கள் ?

 22. Anonymous சயந்தன் said…

  இதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க மடத்துவாசல் பிள்ளையார் அருள்பாலிக்கப் பிராத்திக்கிறேன்..

  November 14, 2009 10:26 AM

  உப்பிடியெண்டா உங்கள் வீட்டு நிலமையை நினைக்க கவலையா இருக்கு சயந்தன்.

  சாந்தி

 23. தொடங்கட்டும் "வருசம் 16" கதை…

  தல, உங்க உந்துதலால நான் "காதலாகிக் கசிந்து" ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு பாதியிலே நிக்குது…

  உங்க காதல் தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 24. அடப் போங்கையா…

  ஒரு முப்பது தான் வரும் என்று இவ்வளவு காலமும் நம்பியிருந்தேனே… 16 வருடங்களுக்கு முன்னர் ஏ.எல் என்றால், அப்ப இப்ப…?

  தொடருக்காக காத்திருக்கின்றேன் அண்ணா… இல்லையில்லை ஐயா… 🙂

 25. அண்ணன்…இப்பதான் வாசிக்கிறேன் ம்ம்ம்…தொடருங்கோ…

  ஆற்ரையோ கதையெண்டு சொன்னாலும் நான் உங்கடை கதையெண்டுதான் படிக்கிறன்.

  🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *