தொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்பேட்டி மற்றும் The Unspeakable Truth மென் நூல்


கடந்த நாற்பது மணி நேரங்களைக் கடந்து ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் உண்ணா நிலைப் போராட்டத்தினை நடத்தி வரும் இவ்வேளை, இன்று சற்று முன்னர் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், சட்டத்தரணியுமாகிய திரு.ஆர்வலன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் போராட்டம் குறித்த ஒலிப்பகிர்வைக் கேட்டிருந்தேன். அதனை இங்கே தருகின்றேன்.

தரவிறக்கிக் கேட்க

British Tamils Forum தற்போது வெளியிட்டிருக்கும் The Unspeakable Truth என்ற மென்னூல் எமது ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரையான காலப்பகுதியில் நடந்தேறிய நிகழ்வுகள், துயரம் தோய்ந்த வரலாற்றினைப் படங்களோடும் முக்கிய ஆதாரங்களோடும் பதிவு செய்கின்றது. இந்த ஆவணம் பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த மென் நூலை இங்கே இணைக்கின்றேன்.

The Unspeakable Truth தரவிறக்கம் செய்ய

நன்றி:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திரு ஆர்வலன்
British Tamils Forum
புதினம் செய்தித்தளம்

14 thoughts on “தொல் திருமாவின் உண்ணாநிலை போராட்டம் குறித்த ஒலிப்பேட்டி மற்றும் The Unspeakable Truth மென் நூல்”

 1. இலங்கை இனவெறி அரசின் தமிழ் இனப்படுகொலைகள் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கும் இக்காலக்கட்டத்தில், அற்ப சொற்ப ஆசைகளுக்காக இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு தமிழினமே அழிவதை வேடிக்கைப் பார்க்கும் இழிநிலை ஈழத்தமிழர்கள் இருக்கும் போது; தமிழினப் பற்றும் உணர்வும் கொண்ட தொ. திருமாவளவன் அவர்களது உணர்வுக்கு ஈழத்தமிழினம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

 2. நன்றி பிரபா பதிவுக்கு.ஏற்கனவே திலீபனின் உயிரை இந்த வழியில் கொடுத்திருக்கிறோம்.திரும்பவும்…?நன்றி என்கிற வார்த்தைகள் தாண்டி என்ன சொல்ல என்று தெரியவில்லை ஐயா அவர்களுக்கு!

 3. // HK Arun said…
  தமிழினப் பற்றும் உணர்வும் கொண்ட தொ. திருமாவளவன் அவர்களது உணர்வுக்கு ஈழத்தமிழினம் என்றும் கடமைப்பட்டுள்ளது.//

  வணக்கம் அருண்

  தொல்.திருமாவளவன் அவர்களது செயற்பாடானாது எவ்வளவு தூரம் எமது மக்கள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும் அவர் இதய சுத்தியோடு இருந்து பணிபுரிகின்றார் என்பதையே காட்டுகிறது இல்லையா? உங்கள் கருத்தை ஏற்கின்றேன். நன்றி

 4. பிரபா! அஹிம்சையின் நாட்டிற்கே அஹிம்சை பற்றிப் புரியக் கூடிய நிலமை இல்லைப் போல…. காலத்தின் தேவை கருதிய உங்களின் முயற்சிக்கு நன்றிகள்…

 5. அண்ணன் திலீபனுக்கு அடுத்ததாக தொல் திருமாவின் உண்ணா நிலை குறிப்பிடக்கூடியது.நன்றி பிரபா அண்ணா

 6. உற்றுக்கவனித்தால் எல்லாமே
  ரத்தமும் கண்ணீருமாய் இடர்ப்படுகிறதே
  காதலும் தாய்மையும் சிதைக்கப்பட்டு கிடக்கிறதே.

  நாங்களின்னும் ஒருவருக்கொருவர் முதுகு சொறிகிறோம்.
  அவமானமாக இருக்கிறது.
  எனக்குத்தெரியும் எல்லவற்றையும் விட எழுத்து
  வலிமையானது. எழுது…

 7. //ஹேமா said…
  நன்றி பிரபா பதிவுக்கு.ஏற்கனவே திலீபனின் உயிரை இந்த வழியில் கொடுத்திருக்கிறோம்.
  //

  வணக்கம் ஹேமா

  இந்த சாத்வீக வழி எவ்வளவு தூரம் கொடுஞ்செயல் செய்வோரை மாற்றும் என்று தெரியவில்லை.

  நிஜமா நல்லவன், மெல்பன் கமல், சந்தனமுல்லை, கஜன், காமராஜ், மற்றும் வெற்றி

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

 8. ஒலி இணைப்பதில் உதவி தேவை எப்படி என்று எனது மின்னஞசலில் தொடர்பு கொள்ளமுடியுமா ?

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *