தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)


அத்தனையும்
கலைக்கப்பட்டு
கனத்த மனத்தோடு
மட்டும்
நாடு கடத்தப்பட்டேனா?
கலைத்ததால் வந்தேனா?
விடை காண
முடியாத கேள்விகள்!!

தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலைக்குள்
சிக்கிய பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தாய்நாட்டை விட்டுத் தப்பி வந்தார்கள். இப்படித் தப்பிவந்தவர்களில் சில நூற்றுக்கணக்கானவர்கள் தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்கள். அந்த நாட்டில் தஞ்சமடைந்தவர்கள்தான் இன்று அந்த நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சுமார் இரண்டு வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தாய்லாந்து (பாங்கொக் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின்) சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகளும், சிறுவர்களுமாக 21 பேரும், இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தச் சிறைகளில் மிகவும் கொடூரமானதும், மிலேச்சத்தனமானதுமான சூழ்நிலைகளுக்குள் தமிழ் அகதிகள் முகம் கொடுக்கின்றார்கள். அவர்கள் சுதந்திரக் காற்றையும் சூரிய ஒளியையும் தரிசித்து பல மாதங்களாகின்றன. சிறிய கூண்டுகளில் பல நூற்றுக்கணக்கான வெவ்வேறு நாட்டுக் கைதிகளுடன் படுத்து உறங்குவதற்குக் கூட இடம் இன்றிப் பரிதவிக்கின்றார்கள். சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் முடக்கப்பட்டுள்ளது. உரிய ஊட்டச்சத்து இல்லாத உணவே கிடைக்கின்றது. அவர்களில் பலர் நோயுற்று இருக்கின்றார்கள். உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புற்றுள்ளார்கள். நோயாளிகளுக்கு எவ்வித பரிசோதனைகளும் இன்றி கம்பிகளுக்கு வெளியிலிருந்து மருந்துகள் எப்போதாவது ஒருநாள் வழங்கப்படுகின்றது. நோயாளிகள் மொழிபுரியாத தாய்லாந்து தாதியிடம் ஊமை சைகை மூலம் தெரிவிக்க வேண்டும்.

கொஞ்சம் சத்தமிட்டுக் கதைத்தால் நோயாளிகளின் கதி அதோகதிதான். நோயாளி கடும் சுகவீனமுற்று இருந்தாலும் மருந்து கிடைக்காது. குழந்தைகள் கடும் சுகவீனமுற்று கவனிப்பாரற்ற நிலையில், அனைத்து தமிழ் கைதிகளும் சத்தமிட்டு உணவு தட்டுக்களால் கதவுகளை தட்டி கலவரம் செய்து மருத்துவ உதவி பெற்று குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவங்கள் அதிகம். கையில் பணம் வைத்திருந்தாலும் குழந்தைகள் விரும்பும் உணவை வாங்கிக் கொடுக்கமுடியாத பெற்றோர்கள், தமது பிள்ளைகளை ஒன்றுசேர்ந்து பார்க்க முடியாத அவலம். குழந்தைகள் மற்றும் பெண்பிள்ளைகள் தாயிடமும், ஆண் சிறுவர்கள் தந்தையர்களிடமும் பிரிக்கபட்டு அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். கணவன்மார்கள் தமது மனைவிமார்களை சந்தித்து சுமார் பத்து மாதங்களுக்கு மேலாகிவிட்டன. இதனால் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் நடைப்பிணங்களாகச் சிறையில் வாடும் அவலம் அங்கு நிலவுகின்றது.

எவ்வித குற்றங்களும் செய்யாமல், உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் அகதிகளாக தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான நிலையை தெரிவிக்கவோ, அறிவிக்கவோ அவர்களுக்கு வெளியுலக தொடர்புகள் எதுவுமே இல்லை. தாய்லாந்தில் உள்ள மனிதநேய அமைப்புக்களுக்கு இந்த விடயம் தெரிந்திருந்த போதிலும் அவர்கள் இந்தவிடயத்தில் ஏனோதானோவென்று இருக்கின்றார்கள்.

தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அகதிகளுக்கு மென்மேலும் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. சில கைதிகளை புலிகள் என்றும், குடும்பங்களோடு இருப்பவர்களை மாவீரர் குடும்பங்கள் என்றும் தமக்குச் சார்பான ஊடகங்களுக்கு அறிவிப்பதும், உள்ளே அடைக்கப்பட்டிருப்பவர்களை சென்று பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் தாய்லாந்து அரசுக்கு எழுத்து மூலம் கேட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தமிழ் அகதிகள் மீது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்படுகின்றது.

தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள பல நூற்றுக்கணக்கானோர் பாங்கொக் நகருக்கு அப்பால் உள்ள கிராமப்புற நகரங்களில் தொடர்மாடிகளிலும் மறைந்து வாழ்கிறார்கள். பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதற்கு அஞ்சுகிறார்கள். இலங்கை தூதரகத்தின் முகவர்கள் தம்மை காட்டிக்கொடுத்து சிறைகளுக்குள் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். தாய்லாந்தில் அகதிகள் என்ற போர்வையில் இராணுவத் துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தமிழ் அகதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.

தாய்லாந்தில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவராலயத்தில் சகல தமிழ் அகதிகளும் பதிவு செய்துள்ளனர். அந்த தூதுவராலயத்தால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் கூட பல வருடங்களாக எவ்வித முடிவும் இன்றி சிறைக்குள்ளும், வெளியிலும் இருக்கின்றார்கள். எனினும் அகதிகளுக்கு ஏற்படும் துர்பாக்கிய சம்பவங்களையும், அசெளகரிகங்களையும் கண்டும் காணாது இருப்பது கவலைக்குரியது. சிறைக்குள் உள்ள அகதிகளைப் பற்றி எவ்வித கவனமும் செலுத்தாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.
குழந்தைகள் படும் துன்பங்கள், துயரங்கள் பற்றி அவர்கள் கணக்கில் எடுப்பதாகவே தெரியவில்லை. குழந்தைகளையும், சிறுவர்களையும் சிறைக்குள் அடைப்பது சர்வதேச குற்றம் என்பது சிறுவர்களுக்காக நிறுவப்பட்டிருக்கும் யுனிசெப் (UNICEF)தனது அறிக்கைகளில் அடிக்கடி வெளிப்படுத்தும் அதேசமயம் தமிழ் குழந்தைகளையும், சிறுவர்களையும் தாய்லாந்து சிறைகளில் அடைத்து வைத்திருப்பது பற்றி மெளனம் சாதிப்பது ஏன்? அந்தச் சிறுவர்களையும், குழந்தைகளையும் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளுக்குச் சென்று குறைந்தபட்சம் அவர்களின் நலன் தொடர்பாகக் கூட விசாரிக்கவில்லை என்பது கவலைக்கும், கண்டனத்துக்குமுரிய விடயம்.

எனவே வெளியுலகுக்கே தெரியாமல் தாய்லாந்தில் தமிழ் அகதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான நிலையிலிருந்து அவர்களை மீட்க அனைத்துச் சமூக அமைப்புக்களும் முன்வர வேண்டும். அவர்களின் விடுதலைக்காக நாம் எல்லோரும் குரல் கொடுக்கவேண்டும். அந்நிய நாடொன்றில் நிர்க்கதியாக அச்சத்துடன் வாழும் எம்மவர் துயர் துடைக்க தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் முன்வரவேண்டும்.

மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள
http://www.mobilize-humanity.org/

இப்படிக்கு
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழன்
வரதன்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

என் குறிப்பாய் சில வரிகள்:

புலப்பெயர்வோடு சுமார் பத்தாண்டுக்கும் மேலாகத் தொலைத்து உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என் சினேகிதர்கள், உறவுகள் என் வலைப்பதிவில் என் பழைய நினைவுப் பகிர்வுகளை வாசித்து இனம் கண்டு தொடர்பை ஏற்படுத்துகின்றார்கள். அப்படியாக கடந்த மாதம் என்னை வலைபதிவு மூலம் அறிந்துகொண்ட எங்களூர் சகோதரன் ஒருவர் தாய்லாந்தில் தானும் இதே நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் வெளியேறிய இவரின் நண்பர் ஒருவர் தாய்லாந்துச் சிறையில் இருக்கும் போது சந்தித்த கண்ணுற்ற இன்னல்களை அவர் கைப்படவே எழுதவைத்து ஸ்கான் பண்ணி, செல்லிடப்பேசியில் முன்னர் எடுத்து வைத்த தடுப்புச் சிறைக்களத்தின் காட்சிகளையும் அனுப்பியிருந்தார்.

“பிரபா அண்ணை! நாங்கள் எல்லாரும் ஏதாவது செய்யவேணும்”
என்று இரஞ்சலாகவே கேட்டுக்கொண்டார்.

என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்கள்?
நாம் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு தமிழ் ஊடகங்கள் மூலம் இந்த அவலத்தை வெளிக்கொணர்ந்து அந்தந்த நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்களின் காதுகளில் எட்டவைத்து இந்த அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியேறிப் பாதுகாப்பாக ஒரு நாட்டில் தஞ்சம் ஏதாவது நாம் செய்யவேணும் இவர்களுக்கு…..

அன்புடன்
கானாபிரபா

38 thoughts on “தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)”

 1. //நாம் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு தமிழ் ஊடகங்கள் மூலம் இந்த அவலத்தை வெளிக்கொணர்ந்து அந்தந்த நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்களின் காதுகளில் எட்டவைத்து இந்த அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியேறிப் பாதுகாப்பாக ஒரு நாட்டில் தஞ்சம் ஏதாவது நாம் செய்யவேணும் இவர்களுக்கு//

  கண்டிப்பாக ஊடகங்களின் தொடர்புகளால்தான் நம் உறவுகளின் சுதந்திரத்தை காண இயலும்

 2. //தாய்லாந்தில் அகதிகள் என்ற போர்வையில் இராணுவத் துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தமிழ் அகதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.//

  பிரபா!
  நாடு நல்ல நாடு நம்மினம் சரியில்லை என்பார்கள். அதே இது…
  இவர்களைத் தமிழ்சமூகப் பிரதிநிதிகள் ஐநா உதவியுடன் சர்வதேச சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து; வெளிக் கொணரவேண்டும். அப்படி அக்கறை எடுக்க முன்வருவது யார்?? அந்த அளவுக்கு இவர்கள் யாருக்கு முக்கியமானவர்கள்.
  அவ்வளவு முக்கியமானவர்களானால் இவர்கள் நேரே வரவேண்டிய நாட்டுக்கு வந்திருப்பார்கள். இப்படிப்
  பஞ்சத்தில் அடிபடும் நாட்டுக்குப் போயிருக்க மாட்டார்கள்.
  நீங்களும் நானும் கவலைப்படலாம்.

 3. அடப்பாவிகளா…………

  இது என்ன புதுக் கொடுமை (-:

  தப்பிப்போனாலும் நல்ல இடத்துக்குப்போகலைன்னா இதுதான் கதியா?

  விவரம் மனித உரிமைக் கழகத்துக்கு இன்னும் தெரியாதா?

  வருத்தமா இருக்கு பிரபா.

  செய்தியை இங்கே எங்க தமிழ்ச்சங்கத்துக்கு அனுப்பறேன்.

 4. சமீபத்தில் தாய்லாந்து சிறைகள் நடத்தப்படும் கொடுமைகளை ஒரு திரைப்படத்தில் பார்த்தேன் – அதில் இரு அமெரிக்க பெண்கள் தவறுதலாக மாட்டிக்கொண்டு – வெளிவருவது எவ்வளவு சிரமம் என்பது சொல்லப்பட்டிருக்கும்.

 5. மிகவும் மன வேதனை அளிக்கிறது. நம் தமிழர்கள் வெளிநாடுகளில் படும் கஷ்டங்களுக்கு என்றுதான் விடிவு காலம் ஏற்படுமோ?

  வேதனையுடன்,
  ஜோதிபாரதி.

 6. பிரபா, இப்பதிவை இங்குள்ள பத்திரிகை நண்பருக்கு அனுப்பியுள்ளேன். அடுத்த இதழில் இதைப் பிரசுரிப்பதாய் பதில் தந்துள்ளார்.
  நன்றி.

 7. ஆயில்யன், கோபி, யோகன் அண்ணா, வரவனையான் வருகைக்கு நன்றி.

  ஆயில்யன்

  நாம் சார்ந்திருக்கும் நாடுகளில் ஊடகங்களினூடாக இயன்றவரை நாம் இதை தெரியப்படுத்துவோம்.

  //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  இவர்களைத் தமிழ்சமூகப் பிரதிநிதிகள் ஐநா உதவியுடன் சர்வதேச சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்து; வெளிக் கொணரவேண்டும். அப்படி அக்கறை எடுக்க முன்வருவது யார்?? //

  வணக்கம் அண்ணா

  குறிப்பிட்ட செயற்பாட்டாளர்களை இச்செய்தி சென்றடையவேண்டும். அதற்கான முனைப்பில் நாம் இயன்றவரை சோராது முயன்று பார்ப்போம்.

 8. //துளசி கோபால் said…
  விவரம் மனித உரிமைக் கழகத்துக்கு இன்னும் தெரியாதா?//

  வணக்கம் துளசிம்மா

  அந்த நண்பரின் குறிப்பின் படி தாய்லாந்தில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் பாராமுகமாகவே உள்ளன. வெளியில் இருக்கும் உலக மனித உரிமைஅமைப்புக்களுக்குத் தான் எமது வேண்டுகோளை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

  தங்கள் நாட்டுத் தமிழ்ச் சங்கத்திற்கு தெரியப்படுத்துவதற்கு மிகுந்த நன்றிகள்.

  ஜீவா மற்றும் ஜோதிபாரதி

  தங்கள் வரவுக்கு நன்றி

 9. ஏன் தமிழர்களுக்கு மட்டும் எங்கு சென்றாலும் இப்படி நடக்கிறது?

  நமது சகிப்புத்தன்மையே நமது எதிரியாகிவிடுகிறதோ?

 10. இங்க மட்டும் என்ன வாழுதாம்..?

  வேலூர் கோட்டை சிறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினரும் கிட்டத்தட்ட 20 வருஷமா அடைஞ்சு கிடக்குறாங்க..

  ஒண்ணு அவங்களை அவங்க நாட்டுக்குத் திருப்பியனுப்பணும்..

  இலங்கை அரசிடம் ஒப்படைப்பது அவர்களது உயிருக்கு இசிதமல்ல என்பதால், பேசாமல் அவர்களை வன்னிப் பகுதிக்கு கொண்டு போய் இறக்கிவிட்டு வந்துவிடலாம்.

  இல்லாட்டி அவங்க சொந்தக்காரங்க யார் வந்து கூப்பிட்டாலும் அவங்களோட அவங்க விருப்பப்படற நாட்டுக்கு அனுப்பி விட்ரணும்..

  அதைச் செய்யாம ஜெயில் மாதிரி இருக்குற டத்துல வழக்கு, விசாரணை, தண்டனை எதுவுமே இல்லாமல் இப்படி அடைத்து வைத்திருப்பது மனித உரிமையற்ற செயல்.

  விடுதலைப்புலிகளுக்காக வக்காலத்து வாங்கும் மைக் மன்னர்கள்கூட.. இந்தக் கைதிகளுக்காக குரல் கொடுக்க மறுக்கிறார்கள்.

  வேலூரைத் தொடர்ந்து இன்னும் இரண்டு இடங்களில் இது போன்ற தடுப்பு முகாம்கள் தமிழகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்..

  என்ன செய்ய?

  வெளியில் இருக்கின்ற மக்களையே கவனிக்க ஆள் இல்லாதபோது, ‘உள்ளே’ இருக்கின்றவர்களைப் பற்றி யார் சிந்திக்கப் போகிறார்கள்..?

  ரொம்ப வருத்தமா இருக்கு பிரபா..

 11. “இட்டமுடன் என்றலையில் இன்னபபடி – என்றெழுதி
  விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – முட்ட முட்டப்
  பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
  நெஞ்சமே யஞ்சாதே நீ”

  என்ற ஔவையை நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனம்மா தமிழ்த்தாயே இன்னும் எத்தனை முறைதான் பாரமவனுக்கென்று பொறுத்துக் கிடப்பதாம்!!

 12. //DJ said…
  பிரபா, இப்பதிவை இங்குள்ள பத்திரிகை நண்பருக்கு அனுப்பியுள்ளேன். அடுத்த இதழில் இதைப் பிரசுரிப்பதாய் பதில் தந்துள்ளார்.
  நன்றி.//

  மிக்க நன்றி டிஜே, நாம் எல்லோருமே முடிந்தளவு எல்லா ஊடகங்களிலும் இதைத் தெரியப்படுத்தவேணும்.

  //ஆ.கோகுலன் said…
  போரின் கொடுமையான விளைவுகளில் இது இன்னொரு வடிவம். :(//

  உண்மை தான் கோகுலன்

  //சுரேகா.. said…
  ஏன் தமிழர்களுக்கு மட்டும் எங்கு சென்றாலும் இப்படி நடக்கிறது?//

  நிம்மதியான வாழ்வை நம் தமிழ்ச்சமூகம் என்றுதான் சந்திக்கப் போகின்றதோ என்பதே என் கவலையும் நண்பரே.

 13. Dear Tamil brothers,sisters and children in prisons of Thailand and other countries!
  We are thinking about you and will help you to get help,attention and release!We will mobilize the UN and other NGOs as well as Norway leaders,media,Embassy and NGOs!
  We are working to mobilize the UN/IC to find political solution soon!Don’t worry!Be happy!Our God say your fate is strong and sound!
  shan nalliah norway

 14. தாய்லாந்து சிறையில் துன்புறும் ஈழதமிழர்கள் தோடர்பான கட்டுரை தேசம்நெற்ரில் மறுபிரசுரமரகி இருந்தது. இவர்களை விடுவிப்பது தொடர்பாக நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். எனக்கு அறிமுகமான ஒரு நண்பரும் அவருடன் மேலும் சிலரும் கடந்த சில வாரங்களுக்கு முன் தாய்லாந்து காவல் துறையால் கைதுசெய்யப்பட்டதாக அறிகிறேன் ஆனாலும் அவர் தோடர்பாக மேலதிகமான தகவல்களை அறியமுடியாமலே உள்ளது. இலங்கையில் உள்ள அவ் நண்பனின் தாய் தந்தை சசோதரர்கள் இவ் செய்தியை அறிந்ததால் ஆளாதுன்பத்துடன் அழுதபடியே உள்ளனர். நான் இயன்றவரைக்கும் எனது நண்பரகளினுடாக தாய்லாந்தில் இதுவிடையமாக உதவிபுரியகூடியவர்களை தேடியவண்ணம் உள்ளேன் ஆனால் இதுவரைக்கும் எதுவிவ முன்னேற்றமும் இல்லை.அவர் எந்த காவல்நிலையத்தில் உள்ளார் என்பதை கூட அறியமுடியலில்லை. இதுவிடையமாக யரராவது உதவிபுரிவீர்களானால் எனது மின்னஞ்சல் முகவரிமூலமாக தொடர்புகெள்ளவும். (ayngran@hotmail.com)
  நன்றி . கரன்

 15. பிரபா!

  இது மிகக் கொடுமையான மனித உரிமை மீறல் செயலாகும். இதனைத் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிக்கொணர்வது எம்மவர் மத்தியில் ஒரு
  ஒரு கவனத்தைப் பெற்றுத்தரலாம். இதுபோல் பாதிக்கப்பட்ட உதிரிகளை ஒன்றினைக்கலாம். அதற்கப்பால் பெரிதா எதுவும் செய்துவிட முடியாது. உங்கள் நண்பர் இப்போ பாதுகாப்பான சூழலில் உள்ளவரானால், அவரது அடையாளங்களோடு ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பிடம் முறைப்பாடு செய்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். இதுவொன்றே இதற்கு சரியானதாகவிருக்கும். அல்லாது நாம் ளியிலிருந்து எடுக்கும் சிறியளவிலான முயற்சிகள், உள்ளிருப்பவர்களுக்கு மேலும் துன்பந்தரக் கூடியதாகவும் அமைந்துவிட வாய்ப்புண்டு.

  //விடுதலைப்புலிகளுக்காக வக்காலத்து வாங்கும் மைக் மன்னர்கள்கூட.. இந்தக் கைதிகளுக்காக குரல் கொடுக்க மறுக்கிறார்கள்.//

  உண்மைத்தமிழன்!
  அப்படி அவர்கள் வெளிப்படையாகக் குரல் கொடுத்தால், உங்கள் நாடு, எங்கள் நாடு எல்லாம் அடைக்கபட்டடிருப்பவர்கள் சந்தேகமில்லை புலிகள்தான் என்று சொல்லிவிடுகிறார்களே 🙁

  பிரபா!
  தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொள்ள முடியுமா ?

 16. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
  இங்க மட்டும் என்ன வாழுதாம்..?//

  உண்மைத் தமிழரே

  உங்களின் கருத்துக்கள் நியாயபூர்வமானமை, மிக்க நன்றி,

  //Vilasam said…
  ஏனம்மா தமிழ்த்தாயே இன்னும் எத்தனை முறைதான் பாரமவனுக்கென்று பொறுத்துக் கிடப்பதாம்!!//

  என்ன செய்வது, ஆண்டாண்டு காலமாய் சொந்த நாட்டிலும் அடிமைகள், வெளிதேசத்திலும் அதே நிலையை உருவாக்குகின்றது.

 17. ஏனம்மா தமிழ்த்தாயே இன்னும் எத்தனை முறைதான் பாரமவனுக்கென்று பொறுத்துக் கிடப்பதாம்

  இந்த அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியேறிப் பாதுகாப்பாக ஒரு நாட்டில் தஞ்சம் ஏதாவது நாம் செய்யவேணும் இவர்களுக்கு

 18. ஏன் உங்கட நாட்டில கிடைக்காத சுதந்திரத்தை இன்னொரு நாட்டில தேடிப்போவான் இ பழையகதைகளை சொல்லி சொல்லி அரசியல் போய்க்கொண்டிருக்கு…நாட்டில…வாழுறதுக்கு இவ்வளவு ஆசையிருக்கும் பொழுது ஏனிந்த யுத்தம் உங்கடை நாட்டில…
  நீங்கள் நீங்கள் மாறினால்தான் நாடு நல்ல நிலமைக்கு வரும்…

  மற்றபடி மனித உரிமைகள் மீறல் என்பது அடைக்கப்பட்ட சிறைகளிலும் நிகழ்கிறது என்பது தாய்லாந்து நாட்டின் அலட்சியப்போக்கினைக்குறிக்கிறது… முறையற்றது!
  என்னால் முடிந்தளவு ஏதாவது உதவுகிறேன் இந்தப்பிரச்சனை தொடர்பாக…

  உங்கள் பதிவுக்கு நன்றி பிரபா…

 19. //இலங்கை தூதரகம் இந்த அகதிகளுக்கு மென்மேலும் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. சில கைதிகளை புலிகள் என்றும், குடும்பங்களோடு இருப்பவர்களை மாவீரர் குடும்பங்கள் என்றும் தமக்குச் சார்பான ஊடகங்களுக்கு அறிவிப்பதும், உள்ளே அடைக்கப்பட்டிருப்பவர்களை சென்று பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது எனவும் தாய்லாந்து அரசுக்கு எழுத்து மூலம் கேட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தமிழ் அகதிகள் மீது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்படுகின்றது.

  தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள பல நூற்றுக்கணக்கானோர் பாங்கொக் நகருக்கு அப்பால் உள்ள கிராமப்புற நகரங்களில் தொடர்மாடிகளிலும் மறைந்து வாழ்கிறார்கள். பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதற்கு அஞ்சுகிறார்கள். இலங்கை தூதரகத்தின் முகவர்கள் தம்மை காட்டிக்கொடுத்து சிறைகளுக்குள் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும். தாய்லாந்தில் அகதிகள் என்ற போர்வையில் இராணுவத் துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தமிழ் அகதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.//

  ??????????

  !!!!!!!!!!!!!!!!!

  இங்த கறுமத்தாலதானே உங்கடை நாடு இப்பிடியிருக்கு கேவலங்கெட்ட அரசியலும் அதுக்கு வால்பிடிக்கிற கும்பல்களாலையும்தான் நாடு இப்படி இருக்கிறது…தனித்தனி மனிதர்களாக நீங்கள் நல்லவர்கள்தான் குழுக்களாக சேரும்பொழுது … மாறிவிடுகிறீர்கள் அல்லது மாற்றப்படுகிறீர்கள்…
  பணம் இரண்டாம்பட்சம் வாழ்வு முதல்…
  தயவு செய்து மாறுங்கள் சகோதரர்களே நம்முடைய நாடு எல்லா வளங்களும் உடையது நாம் இந்த நிலையில் இருக்க வேண்டியவர்களே அல்ல…
  (பிரபா வார்த்தைப்பிரயோகம் தவறென்று கருதினால் பதியாமல் விடுங்கள் நான் குறை கொள்ள மாட்டேன் நன்றி…)

 20. //We are working to mobilize the UN/IC to find political solution soon!Don’t worry!Be happy!Our God say your fate is strong and sound!
  shan nalliah norway//

  மிக்க நன்றி ஐயா, ஏதிலியாக இருக்கும் எம் உறவுகளுக்கு வெகு விரைவில் ஒரு நல்வாழ்வு கிடைக்கவேணும்.உங்கள் முயற்சிகளின் பலாபலன்களையும் அவ்வப்போது அறியவிரும்புகின்றோம்.

  //இதுவிடையமாக யரராவது உதவிபுரிவீர்களானால் எனது மின்னஞ்சல் முகவரிமூலமாக தொடர்புகெள்ளவும். (ayngran@hotmail.com)
  நன்றி . கரன்//

  அன்பின் கரன்

  உலகத்தில் பரந்து வாழும் நம் உறவுகள் தங்களாலான செயற்பாடுகளைச் செய்ய முன்வந்திருக்கின்றார்கள். உங்கள் நண்பர் குறித்த விபரங்களை தனிமடலில் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

  //மலைநாடான் said…
  பிரபா!

  இது மிகக் கொடுமையான மனித உரிமை மீறல் செயலாகும். இதனைத் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிக்கொணர்வது எம்மவர் மத்தியில் ஒரு
  ஒரு கவனத்தைப் பெற்றுத்தரலாம். //

  வணக்கம் மலைநாடான்

  நம் தாயகத்தின் செய்திப்பத்திரிகைகளிலும் இது தொடர்பான விபரங்களை அளிக்கவுள்ளோம்.மனித உரிமை அமைப்புக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அன்பர்களும் இதைத் தெரியப்படுத்தலாம்.

  //yarl nanban said…
  இந்த அப்பாவிகள் சிறையில் இருந்து வெளியேறிப் பாதுகாப்பாக ஒரு நாட்டில் தஞ்சம் ஏதாவது நாம் செய்யவேணும் இவர்களுக்கு//

  வெகு சீக்கிரமே இது நடக்கவேண்டும் நண்பரே

  //Tamilaruvi said…
  hei
  vanakam
  itha vaanoli oliparapu seikirom.
  http://www.tafm24.com//

  தங்கள் வானொலியூடாக இச்செய்தியை எடுத்துவந்ததற்கு மிக்க நன்றி

  கிங்

  உங்கள் கருத்துக்கு நன்றி, நமக்கு நாமே முதல் எதிரிகள்.

 21. தாய்லாந்தில் சிறையில் தவிக்கும் எம் மக்களை வெளிக்கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் இருக்கும் எமது படித்த உறவுகள் ஏதாவது உரிமை அமைப்புக்கள் ஊடாக தயவு செய்து நடவடிக்கைகள் எடுங்கள். அங்கு பெண்களும் 50மேற்பட்டோர் உள்ளனர்.

 22. வணக்கம் பிரபா
  எனது கட்டுரையை பிரசுரித்து சொல்லொண்ணா தூயரங்களுடன் நான்கு சுவர்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள். இந்த முயற்சி வெற்றியளிக்க இணைந்து செயற்படுவோம்.
  நன்றி
  வரதன் waratharaj@yahoo.com

 23. தலைப்பு என்னை வாசிக்கத்தூண்டியது. பதிவை பார்த்தவுடன் ஏன் இங்கு வந்தேன் என்றிருந்தது. உண்மையாகத்தான் பிரபா. தமிழர்கள் என்றதால் தான் இவ்வாறு நடத்தப்படுகிறோமா என்ற கேள்வி எனக்கு பல சந்தர்ப்பங்களில் எழுந்ததுண்டு. உங்களது பதிவு ஆரோக்கியமான தூண்டுதலை என்னுள் ஏற்படுத்தியது.

  //தாய்லாந்தில் அகதிகள் என்ற போர்வையில் இராணுவத் துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அங்கு சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தமிழ் அகதிகள் கைது செய்யப்படுகின்றார்கள்.//

  ஈழப்போராட்டத்தில் களத்தில் இறந்த வீரர்களை விட தமிழர்களே தமிழனால் காட்டிக்கொடுத்து இறந்தவர்களும் துன்பப்படுபவர்களும் அதிகமாக இருக்கலாம். என்ன சொல்கிறீர்கள்????

 24. வணக்கம் பிரபா.இலங்கையில் தமிழனாய் பிறந்தது அன்றி நாம் செய்த குற்றம் என்ன? ஏன் எம் இனத்திற்கு இப்படி ஒரு தண்டனை?பதில் இல்லாத கேள்வி இது!!!!
  ஹேமா.

 25. பாதிக்கப்பட்ட அன்பர், வரதன், நிர்ஷான், முத்துலெட்சுமி, மற்றும் ஹேமா

  தங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  இதே போல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்னும் பல ஈழ அகதிகள் யாரின் கண்ணில் படாமலும் சிறைக்குள் இருக்கின்றார்கள். தாய்லாந்தில் இருக்கும் எமது உறவுகளுக்கு ஒவ்வொரு நாட்டினைச் சார்ந்திருக்கும் நாம் எம்மாலான முன்னொடுப்புக்களைச் செய்வோம்.

 26. each and every tamil/ organisations shd contact thai embassy to let the tamils live in freedom,respect and peace!
  We are working to find justice and peace in SL.GOD BLESS ALL!
  Shan Nalliah-Norway

 27. Please this is the Tailand

  Human right commission site sent

  petition to release our tamil

  people

  http://www.nhrc.or.th/index.php?lang=EN

  The National Human Rights Commission of Thailand
  422 AMLO Building Phya Thai Rd., Pathum wan District, Bangkok 10330, Thailand
  Tel : (66) 2-2219-2980, Fax : (66) 2-2219-2940, Hotline : 1377 E-mail : interhr@nhrc.or.th
  Best view by Microsoft Internet Explorer 6.0 with 800×600 screen resolution.

  yours
  siva

 28. பிரபா அண்ணா,
  இந்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் நேர்காணல் மற்றும் பல இதர பதிவுகளைக் கண்டேன்… ஆயினும் அவர்களை விடுவிப்பது தொடர்பாக என்ன நடக்கின்றது… மற்றும் நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி எனக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை… இளையோர் அமைப்பு மற்றும் தெரிந்த மற்றைய தமிழ் அமைப்புகளுக்கு இந்த விடயம் தொடர்பாகத் தெரிவித்தும் உங்களுடைய கட்டுரையை அனுப்பியும் வருகிறேன்…

  இது தொடர்பாக வேறு ஏதாவது செய்ய முடியும் என்றால் தெரியப்படுத்துங்கள்… நாம் அனைவரும் கை கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்…

 29. நண்பன் பிரபாவிற்கு,

  எம் உறவுகளை வெளியில் கொண்டு வரவே முடியாதா?

  கண்ணீர் மல்க

  ஜஸ்மின்

 30. Shan Nalliah, இளா, சிவா, ஹரன், ஜஸ்மின்

  இந்த அபலைகளின் விடிவிற்கான மகஜர்களை ஒவ்வொரு நாட்டு மனிதாபிமான அமைப்புக்களினூடக அனுப்புவதன் மூலம் எம்மாலான உதவியை நாம் எல்லோரும் செய்வோம்.

  இவர்களுக்கு சுபீட்சமான வாழ்வு விரைவில் கிட்டவேணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *