தேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…!


இத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் உறவுகள் தம் மனக்கண்ணில் எம்பெருமானின் தேரோட்ட நிகழ்வினை வரித்துக் கொண்டு இறையருள் வேண்டி இறைஞ்சினார்கள். நேற்றும் இன்றும் யாழ்ப்பாணத்து மக்களுக்குத் தற்காலிக ஊரடங்கு நீக்கம் கிடைத்தது. எம்மவரின் ஊரடங்கு வாழ்வு நிரந்தரமாக நீக்கப்பட்டு நிரந்தர அமைதியும், அடிமைத் தளையற்ற வாழ்வுக் கிடைக்க தாயக உறவுகளும், புலம்பெயர் உயர்வுகளும் இணைந்து பிரார்த்தனையில் சங்கமித்த நாள் இது.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் சார்பில் அவுஸ்திரேலிய நேரம் காலை 7.30 மணியில் இருந்து (இலங்கை நேரம் 2.00 மணி) மதியம் 1.05 மணி வரை ஐந்தரை மணி நேரம் கடந்த நிகழ்வாக நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் கலந்த படையலைச் செய்து விட்டு, இனம் புரியாதவொரு ஆத்ம திருப்தியோடு வீடு திரும்பியிருக்கின்றேன்.

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.


காலை 5 மணிக்கு, முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு

Get this widget Share Track details

ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது

Get this widget Share Track details

எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய “முருக வழிபாட்டின் சிறப்பு”
க்குறித்த கருத்துப் பகிர்வு

Get this widget Share Track details

முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய “நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்” குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு

அல்லது இங்கே சொடுக்கவும்

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய “தேர்த் திருவிழாவின் சிறப்பு” என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு

அல்லது இங்கே சொடுக்கவும்

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் “நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்” என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு

அல்லது இங்கே சொடுக்கவும்நன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்

படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை
Lanka Library, மற்றும் கெளமாரம் தளம்

8 thoughts on “தேர் காண வாருங்கள்….கந்தனைத் தேரினில் பாருங்கள்…!”

 1. நேர் அஞ்சலியும், திருமுருக வண்ணப் படங்களும்

  நல்லூருக்கே சென்று வந்த உணர்வைக் கொடுத்தன.

  மிக்க நன்றி.

 2. //alien_sl said…
  Praba,

  Thanks for all the posts on Nallur Kandasamy Kovil Thiruvizha. I read all of them. //

  வருகைக்கு மிக்க நண்பரே

  //மாயா said…
  தேர்ப்படங்கள் சுடச்சுட http://mayasphotoblog.blogspot.com///

  நன்றி மாயா, நானும் புதியபதிவு மூலம் ரதோற்சவப் படங்களைத் தற்போது இட்டிருக்கின்றேன்.

 3. //Anonymous said…
  நேர் அஞ்சலியும், திருமுருக வண்ணப் படங்களும்

  நல்லூருக்கே சென்று வந்த உணர்வைக் கொடுத்தன.

  மிக்க நன்றி. //

  ஒலிப்பதிவைக் கேட்டும் பதிவைப் பார்த்தும் கருத்தளித்த உங்களுக்கு என் நன்றிகள்

 4. கண்டோம் கண்டோம்
  கண்ணுக்கும் கருத்துக்கும்
  இனியது கண்டோம்
  கேட்டோம் கேட்டோம்
  செவிக்கும் சிந்தைக்கும்
  இனியது கேட்டோம்

  நன்றி பிரபா.

 5. // சினேகிதி said…
  oru padam madum missing…ther thiruvila neram oru aal irumpu kambiyala thanai thane adichukondu nipare avara kanom oru padathailaum? avarala naan ethina thiruvila miss pani irupen :-(//

  வணக்கம் தங்கச்சி

  இப்படிப் பலரை நினைவில் வைத்திருக்கின்றது இந்தத் திருவிழாக்கள், அமைதி திரும்பும் ஒரு நாள் அவர்களை தேட வேண்டும்.

  //G.Ragavan said…
  கண்டோம் கண்டோம்
  கண்ணுக்கும் கருத்துக்கும்
  இனியது கண்டோம்
  கேட்டோம் கேட்டோம்
  செவிக்கும் சிந்தைக்கும்
  இனியது கேட்டோம்//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராகவன்

Leave a Reply to G.Ragavan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *