“முருகோதயம்” சங்கீதக் கதாப் பிரசங்கம் – சப்பரத் திருவிழா
இன்றைய நல்லைக் கந்தன் ஆலய சப்பரத் திருவிழா நன்னாளிலே, 2005 ஆம் ஆண்டு சப்பரத் திருவிழா நிகழ்வில் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை எடுத்திருந்த புகைப்படங்களும், அத்துடன் சிறப்புச் சங்கீத கதாப்பிரசங்கம் ஒன்றையும் தருகின்றேன்.

“முருகோதயம்” என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.

பாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்

பாகம் 2 ஒலியளவு: 20 நிமி 02 செக்

பாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்

eSnips இல் கேட்க
பாகம் 1

Get this widget | Share | Track details

பாகம் 2

Get this widget | Share | Track details

பாகம் 3

Get this widget | Share | Track details


நன்றி: முருகோதயம் இசைத் தட்டை வெளியிட்ட TTN Music world, 141C Palali Road, Thirunelveli, Jaffna.
புகைப்பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை

9 thoughts on ““முருகோதயம்” சங்கீதக் கதாப் பிரசங்கம் – சப்பரத் திருவிழா”

 1. அண்ணா 2005ம் ஆண்டு தான் என் கடைசித்திருவிழா அந்த முறைதான் கடைசியாக கந்தன் இரவு உலா வந்தார் இருப்பிடம் வந்து சேர இரவு 9.00 மணிக்கு மேலாயிடுச்சு . . . .

  இந்த முறை எப்படியோ தெரியவில்லை . . . எல்லாம் காலம் செய்த கோலம்

 2. ஆகா…இப்படியொரு புதையல். இதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். கேட்டு விட்டு பின்னூட்டம் இடுகிறேன். தொடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

 3. பிரபா!
  பிரசங்கம் அருமை, சற்று வாரியார் சொற்பிரயோகச் சாயல் உண்டு.நிறைவு கூட அவர்போல் ‘உருவாய் அருவாய்’ பாடுகிறார். பக்க வாத்தியம் மிக இதம். துல்லிய ஒலிப்பதிவு.
  சென்ற வெள்ளி இலங்கை வானொலியில் பிரசங்கம் கேட்டேன்.
  அதனிலும் இது இனிமையும் சிறப்பும் மிக்கது.
  இந்த உன்னத கலை ,வாரியார்,மணி ஐயருக்குப் பின் ,இவர் உயிர் கொடுத்துள்ளார்.
  ‘முருகன் முகத்தில் கருணை வழியும், நம் முகத்தில் எண்ணெய் வழியும்’ ரசித்தேன்.
  பதிவுக்கு மிக்க நன்றி…சப்பறப்படம் கோவிலுக்குக் கூட்டிச் சென்றது

 4. கதா பிரசங்கம் வர வில்லை. முன்பு நீங்கள் வைத்தது போல் “esnips” வைக்க முடியுமா? நன்றி.

 5. //மாயா said…
  இந்த முறை எப்படியோ தெரியவில்லை . . . எல்லாம் காலம் செய்த கோலம்//

  வணக்கம் மாயா

  இன்றும் நாளையும் ஊரடங்கு நேரம் தளர்த்தப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கின்றது. நிரந்தரமாக ஊரடங்கில்லாத வாழ்வு நம் உறவுகளுக்குக் கனிய வேண்டும்.

 6. // G.Ragavan said…
  ஆகா…இப்படியொரு புதையல். இதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். கேட்டு விட்டு பின்னூட்டம் இடுகிறேன். தொடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி. //

  வணக்கம் ராகவன்

  நல்லூர் உற்சவ காலப் பதிவுகளை ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஒரு கடையில் கிடைத்த பொக்கிஷம் இது, உங்கள் அனைவருக்கும் யான் பெற்ற இன்பம் கிடைக்க இவ்வாறு கொடுத்திருக்கின்றேன்.

 7. //Anonymous said…
  கதா பிரசங்கம் வர வில்லை. முன்பு நீங்கள் வைத்தது போல் “esnips” வைக்க முடியுமா? நன்றி. //

  வணக்கம் நண்பரே

  கொஞ்சம் தாமதித்துத் தான் அந்த ஒலி வரும். இருப்பினும் உங்களுக்காக eSnips இலும் தற்போது தந்திருக்கின்றேன். கேட்டு மகிழுங்கள்.

 8. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  பிரபா!
  பிரசங்கம் அருமை, சற்று வாரியார் சொற்பிரயோகச் சாயல் உண்டு.நிறைவு கூட அவர்போல் ‘உருவாய் அருவாய்’ பாடுகிறார். பக்க வாத்தியம் மிக இதம். துல்லிய ஒலிப்பதிவு.//

  வணக்கம் அண்ணா

  மெலிதாக இழையோடும் நகைச்சுவையோடு படைத்த இந்த சங்கீதக் கதாப்பிரசங்கத்தை நானும் மிக ரசித்துக் கேட்டேன்.

  நான் நேற்று எமது வானொலியில் நல்லூர் நினைவுகள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியபோது ஒரு நேயர் மணி ஐயரின் சிறப்பைச் சிலாகித்துப் பேசியிருந்தார்.

 9. கேட்டதும் கொடுத்த பிரபாவுக்கு
  நன்றிகள் பல பல.

  வழிப்படுத்துவதற்கே வழிபாடு அருமையான
  விளக்கங்களுடன் மிகவும் நன்றாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *