ஈசனே நல்லூர் வாசனே – இருபத்தியோராந் திருவிழா


இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.

முதலில் “ஈசனே நல்லூர் வாசனே” என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் “ஈழத்தின் சுப்புலஷ்மி” என்று சிறப்பிக்கப்பட்டாராம்.

Get this widget | Share | Track details

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா

தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனேஅடுத்து வருகின்றது “நில்லடா நிலையிலென்று சொல்லுது” என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்


நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

நல்லைக் கந்தன் மஞ்சத் திருவிழாப் படங்கள்: பெயர் குறிப்பிட விரும்பாத யாழ்ப்பாணத்து அன்பர் ஒருவர்.

9 thoughts on “ஈசனே நல்லூர் வாசனே – இருபத்தியோராந் திருவிழா”

 1. பிரபா!
  முத்துக்குமரனை இவ்வளவு சமீபத்தில் படம் பிடித்துத் தந்த அந்த நல்ல உள்ளத்துக்கு ;கோடி புண்ணியம்.
  அருமையான படங்கள். மாலை வெய்யிலில் தங்க நிறம் தகதக என இருக்கிறது.
  என் காலத்தில் இது இரவுத் திருவிழாத் தானே…இந்த மாலைவேலையும் நல்லாதான் இருக்கிறது.
  பாடல் இங்கே கேட்ட முடியவில்லை. இரவு வீட்டில் கேட்கிறேன்.

 2. இனிய பாடலுடன், கருணை நிறைந்த கந்தன் படங்களுடன்
  நல்லூருக்கே அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

 3. முதல் படம், கந்தன் க்ளோசப் அருமை பிரபா! தகதகத தகதகதக என்று ஓடி வா என்ற பாட்டு தான் நினைவுக்கு வந்தது, தகதகக்கும் கந்தனைப் பார்த்து!

  பெயர் குறிப்பிட விரும்பாத யாழ்ப்பாணத்து அன்பருக்கு அடியேன் நன்றிகள்!

  //திருமஞ்சத் திருவிழா//

  அப்படி என்றால் என்ன பிரபா?
  திருமஞ்சன நன்னீராட்டா?
  பொதுவா சிவாலயங்களில் அபிஷேகம் என்றும் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம் என்றும் சொல்லுவார்கள்! ஈழத்தில் எப்படியோ?

 4. இப்பதிவைப் பார்த்தும் வாசித்தும் கருத்தளித்த மாயா, யோகன் அண்ணா, அநாமோதய நண்பர் மற்றும் கண்ணபிரான் ரவி ஷங்கர்
  உங்களுக்கு என் நன்றிகள்.

  யோகன் அண்ணா

  நாட்டுச் சூழ்நிலையால் மாலைவேளை வீதி வலம் வந்திருக்கின்றார் முருகப் பெருமான்.
  பாடலைக் கேளுங்கள், அருமையான பாடல்,

  வணக்கம் கண்ணபிரான்

  முருகப் பெருமானின் இத்திருவெழிலை நான் தாயகத்தில் இருந்தபோது கூட இவ்வளவு தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.

  மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு நாட் திருவிழாவும் சிறப்பான விழாவாக இருக்கும். அதில் ஒன்று தான் திருமஞ்சத்திருவிழா. மஞ்சத்திலே வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் அந்நாளில் வீதி வலம் வருவார்.

  மஞ்சத்திருவிழா குறித்த ஆகம ரீதியான மேலதிக விளக்கத்தை யாராவது பகிரலாம், அல்லது கேட்டுத் தெரிந்து சொல்கின்றேன்.

  மஞ்சத்திருவிழாவும் திருமஞ்சன நீராட்டும் வேறானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *