பொப் இசையில் மால் மருகன் – பதினைந்தாம் திருவிழா


கடந்த பதிவுகளில் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பில் வரலாற்றுப் பதிவுகள் அமைந்திருந்தன. தொடர்ந்து வரும் நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் மேலும் சில படையல்களோடு அமைய இருக்கும் இவ்விசேட பதிவுகளில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல். ஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் அவர்கள், அரவிந்தன் இசையில் பாடும் இப்பாடல் வழக்கமான பக்திப் பாடல்களில் இருந்து விலகிப் மெல்லிய இசை கலந்த பொப்பிசைப் பாடலாக மலர்ந்திருக்கின்றது. தொடர்ந்து பாடல் வரிகளையும் கீழே தந்திருக்கின்றேன்.

Get this widget | Share | Track details

மால் மருகா எழில் வேல் முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே
மால் முருகா எழில் வேல்முருகா நீயே
ஆவலுடன் உன்னைத் தேடி வந்தேனே

முருகா வடிவேலா………..
தருவாய் அருள் குமரா…..
முருகா வடிவேலா…….
தருவாய் அருள் குமரா……

நல்லூர் நாயகனே….! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா
நல்லூர் நாயகனே….! நல்வழி காட்டுமைய்யா
நம்பிய பேர்களது துன்பங்களைத் தீருமய்யா

நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே

கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கனிமலைக் கந்தவேளே காப்பது நீயய்யா
கதியே நீயென்றால் பதியே சரணமய்யா
கந்தா கதிவேலா…வருவாய் சிவபாலா….
கந்தா கதிவேலா…வருவாய் சிவபாலா….

ஏழுமலை இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
ஏழுமலைப் இறையினிலே எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய் ஆறுமுகா அழகேசா
குமரா எழில் முருகா……
குறுகுறு நகை அழகா……
குமரா எழில் முருகா……..
குறுகுறு நகை அழகா……..

தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
தோகைமயில் ஏறிவரும் சேவல் கொடியழகா
பழமுதிர்ச்சோலைகளில் பவனி வரும் வடிவழகா
அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..
அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..

லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
லண்டன், பாரிஸ், சுவிஸ், ஜேர்மனி, நேர்வே, ஒஸி
கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
உலகாள் தமிழ்த் தலைவா…….
உமையாள் திருக்குமரா…………
உலகாள் தமிழ்த் தலைவா…….
உமையாள் திருக்குமரா………….

சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா
சிவனின் மைந்தனய்யா சிங்கார வேலனய்யா
தகப்பனுக்குபதேசம் செய்த சுவாமி நீயய்யா

தவறுகள் பொறுத்திடுவாய்…..
தமிழரைக் காத்திடுவாய்……….
தவறுகள் பொறுத்திடுவாய்…..
தமிழரைக் காத்திடுவாய்……….

அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..
அரகர ஆறுமுகா……….
அருளீர் திருக்குமரா…..

12 thoughts on “பொப் இசையில் மால் மருகன் – பதினைந்தாம் திருவிழா”

 1. 20 வருடங்களிற்கு பிறகு இந்த பாடலை கேட்பதற்கு உதவிசெய்த கானாக்கு நன்றி.

  அட இது வேறா.

  லண்டன்இ பாரிஸ்இ சுவிஸ்இ ஜேர்மனிஇ நேர்வேஇ ஒஸி
  கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
  லண்டன்இ பாரிஸ்இ சுவிஸ்இ ஜேர்மனிஇ நேர்வேஇ ஒஸி
  கனடா வாழ்த் தமிழன் நாயகனே முருகய்யா
  உலகாள் தமிழ்த் தலைவா…….
  உமையாள் திருக்குமரா…………
  உலகாள் தமிழ்த் தலைவா…….
  உமையாள் திருக்குமரா………….

 2. இவர்தானே “சின்னமாமியே” பாடலுக்குரியவர். நேரமிருந்தால் இலங்கையை ஒரு காலத்தில் கலக்கு கலக்கிய பொப்பிசை பாடல்கள் வரலாறு, பாடல்கள் பற்றி உங்கள் வலைப்பதிவினுடாக அறியத் தருவீர்கள் என நம்புகின்றேன்.

 3. ஒரு முறை யாழில் முற்றவெளியில் பொப்பிசை சக்கரவர்த்தி தேர்வு நடந்தது.அதில் பாடிய மனோகரன் சொன்ன வரிகள் இப்போதும் ஞாபகம் வருகிறது.

  நல்லூர் கந்தன் இருக்கும்வரை இந்த பாடலும் இருக்கும் என்று கூறி இந்தப் பாடலை கூறினார்.

  உங்கள் பதிவு அந்த நாளை ஞாபகப்படுத்தியது.

 4. //நளாயினி said…
  20 வருடங்களிற்கு பிறகு இந்த பாடலை கேட்பதற்கு உதவிசெய்த கானாக்கு நன்றி.
  //

  வாங்கோ நளாயினி அக்கா

  20 வருஷங்களுக்குப் பிறகே இந்தப் பாடலைக் கேட்கின்றீர்கள்? அப்படியென்றால் இதையொத்த இன்னும் பல பாடல்களைக் கைவசம் வைத்திருக்கின்றேன், உங்களைப் போன்ற இசை இரசிகர்களுக்காக அவ்வப்போது எடுத்துத் தருகின்றேன்.

  பாரெங்கும் தமிழன் பரவி வாழவும் முருகனுக்கும் வீடு கிடைத்தது, அதைத் தான் முக்கிய நாடுகளைக் காட்டிப் பாடுகின்றார் அவர்.

 5. //தாசன் said…
  இவர்தானே “சின்னமாமியே” பாடலுக்குரியவர்.//

  வணக்கம் தாசன்

  இவர் சின்னமாமியே பாடவில்லை, சின்னமாமி பாடியவர் நித்தி கனகரத்தினம் அவர்கள். அவுஸ்திரேலியாவில் தான் இருக்கின்றார். விரைவில் அவருக்கான ஒரு கெளரவ நிகழ்வையும் இங்கே ஒழுங்கு செய்ய இருக்கின்றோம். மெல்லிசை நாயகர்கள் குறித்து ஒரு கட்டுரையை நிச்சயம் பின்னர் பதிவாகத் தருகின்றேன்.

  சின்னமாமியே பாடலைப் பாடிய நித்தி கனகரட்ணம் அவர்களின் செவ்வியோடு கலந்த பதிவு கனக சிறீதரன் அண்ணாவின் பக்கத்தில் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது

  http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_13.html

 6. பாப்பிசையில் முருகன் பாடல். சிலோன் மனோகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இவரைப் பற்றி. சுராங்கனி பாட்டையும் இவர் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

  பாடலை ரசித்தேன். கந்தனை எப்படிப் பாடினாலும் சுகம். சுகம். சுகம்.

 7. //theevu said…
  ஒரு முறை யாழில் முற்றவெளியில் பொப்பிசை சக்கரவர்த்தி தேர்வு நடந்தது.//

  வணக்கம் தீவண்ணை

  இந்தத் தேர்வு குறித்த மேலதிக செய்தியை அறிய ஆவலாக இருக்கின்றேன். ஏ.ஈ.மனோகரன் ஒரு தனித்துவமான பாடகர் என்பதைக் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் அவர் பாடல்களும் மெய்ப்பிக்கின்றன.

 8. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
  இப்படியோரு பாடல் இருக்கிறதா? இப்போதே கேட்டேன்.
  மனோகரன் எல்லாப்பாடலும் ஒரே பாணியில் பாடுவது போல் உள்ளது. //

  வணக்கம் யோகன் அண்ணா

  இது வெகு காலத்துக்கு முன்னே வெளிவந்த பாடல், தற்போது நான் இணைத்த பாடலில் வெளிநாட்டு ஊர்களின் பெயர்களை இணைத்துப் புதிதாகப் பாடப்ப்பட்டிருக்கின்றது.

  இவர் பாடல்களைக் கேட்கும் போது ஒரே மாதிரி இருப்பதற்கு ஒரு காரணம் பின்னணியில் வரும் இசை பெரும்பாலும் ஒரே வாத்திய வாசிப்பில் இருப்பதால் போலும்.

 9. //G.Ragavan said…
  பாப்பிசையில் முருகன் பாடல். சிலோன் மனோகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இவரைப் பற்றி. சுராங்கனி பாட்டையும் இவர் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

  வணக்கம் ராகவன்

  சுராங்கனி பாடிய அதே மனோகர் தான், வருகைக்கு மிக்க நன்றிகள்

  //கோபிநாத் said…
  ஒவ்வொரு நாளும் திருவிழா கலக்குது தல ;)))//

  இன்னும் இருக்கு, அடிக்கடி வாங்க தல 😉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *