சயந்தனுக்குக் கண்ணாலம்


பாரை மீனுக்கும் விள மீனுக்கும் கல்யாணம்…மன்னிக்கவும்

சயந்தனுக்கும் வெர்ஜினியாவுக்கும் கல்யாணம்
அந்த சுவிஸ் சனமும் சேருதைய்யா ஊர்கோலம்

எங்கள் சக வலி, மன்னிக்கவும் வலைப்பதிவாளர் சயந்தன் வருகிற யூலை 8 & 9ஆந் தேதிகளில் ( எதுக்குப்பா ரெண்டு நாள்) பொண்ணு இப்பவே, “கருத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்” பாட்டு பாடீட்டே திரியுதாம். நம்ம மாப்பிளை சயந்தன் “புது மாப்பிளைக்கு புது யோகமடா” பாட்டை விசிலடிச்சுக்கிட்டே சுவிஸ் நாட்டுக்குப் பறக்கிறாராம்.மேலதிக விபரங்களுக்கு “நிக்கோல் கிட்மன்” புகழ் வசந்தனின் வலைப்பதிவு இதோ:
சக வலைப்பதிவாளரின் திருமணம்

திருமண அனுபவம் பற்றித் திருமணமான ஆண் வலைப்பதிவாளரைடம் கேட்டபோது அவர் ” என்னவோ போங்க, திருமணமான ஆணும் பலி ஆடும் ஒண்ணு தான்” என்றார் வெறுப்பாகக் சலித்துக்கொண்டே.
எல்லாரும் ஜோராக் கை தட்டி வாழ்த்துங்கப்பா இவங்களை.

5 thoughts on “சயந்தனுக்குக் கண்ணாலம்”

 1. குசும்பன் வேறு
  யாருமல்ல. வந்திய
  தேவன் தான். வந்திய
  தேவன் மறந்து போய்
  குசும்பன் ஐடியில்
  ஸ்ரீகாந்திற்கு
  பதில்
  சொல்லியிருந்தார்.
  தான் குசும்பன்
  என்பதை காட்டி
  கொண்டு விட்டார்.
  யாரோ தகவல் சொல்லி
  இரண்டு நாள் கழித்து
  அந்த பின்னூட்டத்தை
  நீக்கியும்
  விட்டார். இப்படி
  வசமாய் மாட்டி
  கொண்டு குசும்பன்
  பதிவில் ‘கடைசி
  வார்த்தை’ என்று
  எழுதி அப்பன்
  குதிருக்குள் இல்லை
  என்று சொன்னார்.
  யாருமே இதை
  கவனித்ததாக
  தெரியவில்லை.

 2. மணியன் said…
  நாங்க எல்லாம் வசந்தன் பதிவிலேயே வாழ்த்து சொல்லிவிட்டோம்.:)

  ஆமாம் பார்த்தேன் மணியன்:-)

  எங்கு வாழ்த்துச் சொன்னாலும், எல்லாப் புகழும் அவருக்கே:-))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *