நட்சத்திர வணக்கம்


வணக்கம் நண்பர்களே

நான் பணிபுரியும் அவுஸ்திரேலிய இன்பத்தமிழ்வானொலியில் நிகழ்ச்சி படைக்கும் போது அவ்வப்போது பயனுள்ள இணையப்பக்கங்களைப் பற்றிய குறிப்புக்களை நேயர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒரு சமயம் தற்செயலாகக் கண்ணில்பட்டதுதான் இந்தத் தமிழ்மணம். தமிழ்மணத்தின் சிறப்புக்களைப் பற்றி அப்போது வானொலியில் குறிப்பிட்டும் இருந்தேன். ஓராண்டு கழிந்து மார்கழி 2005 இல் சடுதியாகத் தோன்றிய என் எண்ணம், நானும் இந்த வலைப்பூவில் என் பங்களிப்பை வழங்க அடிகோலியது.

மடத்துவாசல் பிள்ளையாரடி, என் தாய்மண் ஈழத்தில் தொடர்கதையாகிப் போன துன்பியல் வாழ்வில் கழியாத என் நினைவுகளின் மீட்டலாகப் பயணிக்கின்றது.
என் சகவலைப்பூவான உலாத்தல் பதிவு, உலாத்திக்கொண்டே இருக்கும் என் பயண நினைவுகளின் பதிவு.

தமிழ் மண நட்சத்திர வாரத்தில் மட்டும் உலாத்தல் பதிவில் வரும் இடுகைகள் சில சமநேரத்தில் மடத்துவாசல் பிள்ளையாரடி பதிவிலும் அரங்கேறும்.
நான் வலைப்பூ ஆரம்பித்த கடந்த 6 மாதத்தில் மட்டும் வித்தியாசமான, ஆரோக்கியமான சிந்தையுள்ள எத்தனை, எத்தனை நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். நினைக்கவே பிரமிப்பாகவும், பெருமிதமாகவும் உள்ளது. அது மட்டுமா? ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தபோது தொலைத்த என் சகபாடிகள் சிலர் கூட மீண்டும் கிடைத்திருக்கிறார்கள்.

இந்த நட்சத்திரவாரத்தில் என் கழிந்த நிகழ்வுகளும், கழியாத நினைவுகளும், நூல் ஆய்வு, திரைப்பார்வை, உலாத்தல் என்று பயணப்பட இருக்கிறேன், உங்களின் மேலான ஒத்துழைப்போடு…

தமிழ்மணமே வணக்கம்.

நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா

62 thoughts on “நட்சத்திர வணக்கம்”

 1. கானா பிரபா,
  தமிழ்மணத்தில் இவ் வார நட்சத்திரமாக ஜொலிக்கவுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து நல்ல படைப்புக்கள் வரும் என வாசிப்பதற்கு ஆவலாக உள்ளேன்.

  மிக்க நன்றி

 2. — கழிந்த நிகழ்வுகளும், கழியாத நினைவுகளும், நூல் ஆய்வு, திரைப்பார்வை, உலாத்தல்—

  நன்றி & ஆர்வம் கலந்த வரவேற்பும்

 3. நன்றிகள் டி சே, பெத்தராயுடு , பாலா, கோவி.கண்ணன், தெய்வா

 4. வாங்க கானாபிரபா! உங்க ஊரு கதைகளுக்கும், யாழ் தமிழுக்கும், உங்களின் நிறைவான எழுத்து நடைக்கும் என்றுமே ரசிகை நான். பதிவு பெரியதாய் இருந்தால் இரண்டு பாகமாய் போடவும். வாசக சாலை பதிவின் நீளம் அதிகம். அங்கு சொல்ல
  நினைத்ததை இங்கு சொல்லிவிட்டேன்.

 5. வணக்கம் உஷா

  நீண்ட பதிவு என் கூடவே பிறந்தது:-)
  பதிவை இரண்டாகப் போடும்போது அதன் வேகம் தடைப்படுவதாக நினைத்தே அப்படிச் செய்கிறேன். உங்களின் மேலான கருத்தை நிச்சயம் கவனத்தில் எடுப்பேன்.

  நன்றிகள்

 6. கானாபிரபா…. நாட்சத்திரமாய் பிரகாசிக்க வாழ்த்துக்கள்…
  இவ்வாரமாவது தினமொரு பதிவை வாசிக்கலாம்…. 🙂

 7. வணக்கம் குழக்காட்டான்

  //இவ்வாரமாவது தினமொரு பதிவை வாசிக்கலாம்…. 🙂 //
  ஒரு சில பதிவுகளை ஏற்கனவே எழுதிவைத்துவிட்டேன்

 8. கானாபிரபா, என்னைப் போல அவதி அவதியாய் படிப்பவர்களுக்கு நீண்ட பதிவை முடிப்பது கடினம். சிலர் நாலே வரிகள் எழுதி பதிவு என்று போடுவார்கள். அப்படி பட்டவர்கள் பதிவுகளை கட்டம் கட்டிவிட்டேன்:-))
  பதிலுக்கு நன்றி

 9. நட்சத்திரமா? வாழ்த்து.

  நீண்டபதிவுகளைக் குறுக்குகிறேன் என்று விளையாடாதீர்கள். விடயத்தை இரண்டாக்கி இரண்டு பதிவு எழுதலாமேயொழிய பதிவை இரண்டாக்காதீர்கள்.

 10. //வன்னியன் said…
  நீண்டபதிவுகளைக் குறுக்குகிறேன் என்று விளையாடாதீர்கள். விடயத்தை இரண்டாக்கி இரண்டு பதிவு எழுதலாமேயொழிய பதிவை இரண்டாக்காதீர்கள். //

  சரி தலைவா:-))

 11. வாங்க நட்சத்திரமே.

  கேரளா எல்லாம் சுத்திப்பார்த்துட்டு அப்படியே நட்சத்திரமண்டலம் விஸிட்டா?

 12. வணக்கம் கானா பிரபா.

  இந்தவாரம் நிறைய சுவாரசியமான
  பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்று
  சொல்லுங்கோ.சரி நிறையசெய்ய அதனை
  நிறைவாய் செய்ய எனது வாழ்த்துக்கள்
  மோனே!!!!!!!!!!!!!!

 13. வாழ்த்துகள் பிரபா. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். நீங்கள் நட்சத்திரமானது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

 14. வணக்கம் துளசிம்மா

  நட்சத்திர மண்டலத்துக்கு வரும் மகிழ்ச்சியில் நேற்றுத் தூக்கமே இல்லை, அவ்வளவு குதூகலிப்பா இருந்தது.

 15. வணக்கம் கரிகாலன்

  ஏதோ என்னால முடிஞ்சதைச் செய்யிறன் மேனை:-)

  வணக்கம் ராகவன்

  தங்கள் அன்பு மடலுக்கு நன்றிகள்

 16. வாழ்த்துக்கள் கானாபிரபா.
  இனிய வாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன்,
  மணியன்

 17. வாழ்த்துக்கள் கானா பிரபா. உங்கள் கிராமத்து நினைவுகளுடனான பதிவுகள் இந்த வாரம் முழுக்க வரப்போகிறது என்று அறிந்து மகிழ்ச்சி. என்னுடைய browserஇன் முதற்பக்கத்தில் உங்கள் பதிவைச் சேர்த்து விட்டேன் (மன்னிக்கவும், இந்த வாரம் மட்டும்:-).

 18. பிரபா!
  2 நாள்,தமிழ்மணத்தைத் திறக்கவில்லை. இன்று நம்ம “நட்சத்திரம். அவுஸ்ரேலியா பற்றியும் கட்டாயம் எழுதவும். கலக்குங்க!
  யோகன் பாரிஸ்

 19. மணியன், ஈழபாரதி, ஓகை, சிறீ அண்ணா

  தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்:-)

 20. வணக்கம் யோகன் அண்ணா

  முடிந்தவரை தங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்றேன்.

 21. வாழ்த்துக்கள் கானபிரபா…. இந்த வாரம் எல்லாவித தலைப்பின் கீழும் பதிவை எதிர்பாக்கிறோம்… உங்கள் அறிவிப்பாளர் பக்கத்தினையும் காட்டி ஒரு பதிவாய் போடுங்களேன்

 22. முடிந்த அளவிற்கு என் படைப்புக்களைத் தருகின்றேன் சின்னக்குட்டியர்

 23. அப்பாடி!! ஒரு மாதிரியாக இந்தவார நட்சத்திரமாக கானா பிரபா நீங்கள் வந்துவிட்டீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்களுடைய ஆக்கங்களை. வாழ்த்துக்கள்

 24. இனிய நட்சத்திர வாழ்த்துக்கள் கானா பிரபா.இந்த நட்சத்திர வார படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

 25. நட்சத்திரமே வணக்கம்!

  ஏனிந்த சுணக்கம் என நற நறப்பது தெரிகிறது.

  தற்போது நான் ஜேர்மனியில் நிற்கின்றேன். நிற்குமிடத்தில் இணையத் தொடர்பு இல்லாத காரணத்தால் உடன் வர முடிடயவில்லை.
  இனிவரும் நாட்கள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

 26. வாழ்த்துக்களைத் தெரிவித்த நண்பர்கள்
  கப்பிப்பய, சிவபாலன், சங்கர்குமார், யூ.பி.தர்சன், $ல்வன், மலைநாடான்,
  உங்களுக்கு என் அன்பு நன்றிகள்

 27. நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்க பட்டதற்கு மிகுந்த பாராட்டுக்கள். எழுதி குமியுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

 28. வாழ்த்துகள் நண்பா.

  உங்க நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  – பரஞ்சோதி

 29. அன்பின் பரஞ்சோதி

  தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்

 30. கானா பிரபா,
  தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரமாக தேர்வானதற்க்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்…
  சரவணன்.

 31. வாழ்த்துக்கள் பிரபா!
  ஒரே வானொலியில் பணிபுரிந்திருந்தாலும் இது வரை நேரே சந்தித்துக் கொள்ளாத நம்மை காலம் ஒரு நாள் சந்திக்கச் செய்யும் என உரத்துக் கூறுவோம்.

 32. அன்பு நண்பரே, கொஞ்சம் தாமதமாக வர நேர்ந்துவிட்டது.

  இருந்தாலும் வாரம் முடிவதற்குள் வந்துவிட்டேன் வாழ்த்துக்கள் சொல்ல.

  இந்த உங்கள் நட்சத்திர வாரம் இனிய வாரமாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

  மஞ்சூர் ராசா
  http://manjoorraja.blogspot.com/
  http://muththamiz.blogspot.com/
  குழுமம்:http://groups.google.com/group/muththamiz

 33. வணக்கம் சயந்தன்

  உங்களிடம் இருக்கும் அதே எதிர்பார்ப்போடு நானும் இருக்கிறேன்.

 34. வணக்கம் மஞ்சூர் ராஜா

  தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்

 35. வருக வருக என்று தாமதமாக வரவேற்கிறேன். உங்களுடைய தமிழ் ஈழ வாடையோடு மிகவும் நன்றாக உள்ளது என்றாலும் எங்கள் தானை தலைவருக்காக கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். :-)))))))

 36. வணக்கம் குமரன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்:-)

 37. ஓ இந்த வார நட்சத்திரம் நீங்களோ? வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!சும்மாவே வெளுத்து வாங்குற ஆள்:-) நட்சத்திர வாரம் சிறப்பாக அமையட்டும். ஆகா 14 வயதிலயே அணிந்துரை எழுதினீங்கிளோ….உலகத்தரத்தில் உங்கள் குறும்படங்கள் பேசப்படட்டும்.

 38. வாழ்துக்களுக்கு நன்றி சினேகிதி:-)

  தொடர்ந்தும் என் நட்சத்திர வாரப் பதிவுகளைப் பார்த்துத் தங்கள் விமர்சனத்தைத் தரவும்.

 39. வணக்கம் தம்பி
  தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.

 40. கால தாமதமான வரவேற்புக்கள்…
  மேலும் பல சிறந்த பல படைப்புக்களைத் தர வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *