வணக்கம்! வாருங்கோ…!


கானா பிரபாவின் “மடத்து வாசல் பிள்ளையாரடி” தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.
பதின்ம வயதுகளின் விளிம்பில்
இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ

28 thoughts on “வணக்கம்! வாருங்கோ…!”

 1. மறந்த யாழ்ப்பாண தமிழை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதற்கு உங்களுக்கு நன்றி.

  தொடர்ந்து இதே பாணியில் தாருங்கள்.

 2. I do not agree with your comments about “நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில”, looks like you haven’t meet the right friends.Please don’t blame the country for your over sights. I will appreciate it if you pay some respect to the country which is trying to give you an identity and a place to feel safe with.
  You are not matured enough to identify that, as humans we really enjoy our teens, where ever we lived during that time will be heaven for us for the rest of our lives. Please rethink!

 3. வந்தாச்சா..! முதல் வேலையா எங்கடை தென்துருவ வலைப்பதிவர் சங்கத்தில சேருங்கோ! சிட்னியில அப்ப இன்னுமொரு மாநாட்டிற்கு இடம் இருக்கு

 4. well done! Kana!
  I really appriciate your ‘Muyatchi’, specially the real ‘Panagkottai’ tamil.
  My ‘Vaalthukal’ for “MADADATHU VASAL MAVEERAN”.
  kepp it up with more latest tamil songs, and some cinema stories

 5. உப்பிடிச் சொன்னதுக்குத்தான் பொன்னம்மான் ‘பனங்கொட்டை’ எண்ட பேரில கையெறிகுண்டு செய்து எறிஞ்சவர். கவனம்:-)

 6. வணக்கம் தம்பி செந்தூரன்,

  தங்கள் வருகைக்கு நன்றிகள். நான் வாழும் நாட்டிற்கு விசுவாசமாகவும் நன்றியுடனும் தான் உள்ளேன். ” நட்புக்கும் விலை போடும்” என்று குறிப்பிடக்காரணம், இங்கே ஆணோ பெண்ணோ சிலவேளை பத்திரிகையைத் தேடித்தான் அதில் உள்ள வரி விளம்பரம் மூலம் நண்பர்களைச் சம்பாதிப்பார்கள் அவை பணப்பரிமாறலுடன், பணம் சார்ந்த நட்பாகவும் பலவேளை உள்ளது.
  அதை மையபடுத்தித்தான் குறிப்பிடேன். மற்றப்படி உங்களைப் போலத்தான் எனக்கும் பெரிசாப் பிரச்சனை எண்டில்லை.

 7. வணக்கம் அண்ணா

  உங்களுடைய பக்கம் நன்றாக உள்ளது.நானும் இணுவில் தான்..உங்கள் பக்கம் பார்த்ததில் சந்தோஷம்..வாழ்த்துக்கள்

 8. வாங்கோ கார்த்திகா

  எங்கட ஊராளைக் காண்பதில் எனக்கும் மகிழ்ச்சி, தொடர்ந்து உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கின்றேன்.

 9. அண்ணா:-h
  அண்ணா
  Sorry :))

  அதில்லை பழைய ஒன்று மீண்டும் வெளிய வந்திட்து அதுதான் . . . .

  மற்றும்படி ஒன்றுமில்லை 😉

 10. அட, கானா பிரபா, நீங்களும் பழைய காய்தான், huh? :-))

  2005 லையே துவங்கி விட்டியள். உங்களோடை ஒப்பிடேக்கை நான் எல்லாம் வெறும் பால்குடிதான் :-))

  இனி அப்ப உங்களையும் “மூத்த பதிவர்” எண்ட அடைமொழியோடை கூப்பிடலாம்…:-))

 11. வெற்றியண்ணை

  என்னையும் மூத்தபதிவர் ஆக்கியாச்சோ 😉 இன்னும் 2வருசமே ஆகேல்லை

 12. என்ன அண்ணா. திடீர் என்று. இந்த பதிவு வித்தியசமாய் இருக்கு. மூத்த பதிவாளருக்கு ஒரு ஓ…போடுகின்றேன். சும்மா ”பனங்கொட்டை” கதையை சொல்லி ”பனங்கொட்டை” சூப்பின நினைவு வந்து விட்டது.

 13. வணக்கம் தாசன், மருதமூரான்

  இது நான் குடிபுகுதலுக்கு எழுதின பதிவு, 2 வருசம் கழிச்சும் வாழ்த்து வருகுது 😉

 14. வாங்க வெயிலான்

  2 வருஷம் முன்னே எடுத்தது தான், ரொம்பப் பழசெல்லாம் கிடையாது ;)))

 15. வணக்கம் Letty

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். நீங்கள் குறிப்பிடுவது “பதேர் பாஞ்சாலியும் பெரியமாமியும்” என்ற ஆக்கம் பற்றியது என்று நினைக்கின்றேன்.

 16. Tஎன் மனதை வருடுகிறது.. நானும் இனுவில்தான். லாவஞ்ஞனும் என்னோடுதான் படிச்சவன்… உங்கலோடு தொடர்பு கொள்ளனும் எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *