ராஜராஜசோழன் – சீர்காழியாரின் நிழலும் மறைந்தது

இன்றைய எனது காலை எடுத்த எடுப்பிலேயே இரண்டு மரணச் செய்திகளைச் சந்தித்தது. ஒருவர் சமூக வலைத்தளத்தில் உறவாடிய நண்பர் சுதாகர் மறைவு. அந்தச் செய்தியை அறிந்த கணமே உறைந்து போய் அவரின் பேஸ்புக் பக்கத்தின் இடுகைகளைப் பார்த்துக் கொண்டு போனேன். தன் ஒன்பது வயது நிரம்பிய செல்வ மகளைக் கொண்டாடும் தந்தையின் பூரிப்பில் பகிர்ந்த இடுகையில் கண்கள் குத்திட்டு நின்றன. இந்தக் குழந்தையை விட்டுப் போக அவ்வளவு என்ன அவசரம்? இனி அது உம் அரவணைப்பு இல்லாமல் […]... Read More
70077729

கணேசபிள்ளை மாஸ்டரின் சமய வகுப்பு

வேலை முடிந்து வீடு திரும்பி குளித்து முடித்து விட்டு  சுவாமி அறையில் இருக்கும் தொட்டிலில் இலக்கியா பார்த்துக் கொண்டிருக்க நான் சாமி கும்பிடும் போது வாயில் சத்தமில்லாமல் தேவாரத்தை முணு முணுக்கும் போது அதைக் கண்டு இப்படித்தான் தான் சாமி கும்பிட வேணுமாக்கும் என்று தானும் தன் கையைக் கூப்பிக் கொண்டே வாயில் சுவிங்கம் மெல்லுவது போல இலக்கியா அசை போடுவதைக் கண்டு சிரிப்பு வரும் அப்போது சில சமயன் பள்ளித் தோழன் சாரங்கனையும் கணேசபிள்ளை மாஸ்டரையும் […]... Read More
49918

The Last Halt – கடைசித் தரிப்பிடம்

தொண்ணூற்றஞ்சாம் ஆண்டு ஊரை விட்டு வெளிக்கிட்டு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வி கற்க வந்த போது இருப்பிடத்தில் இருந்து ககுதி நேர வேலை சகலதும் கிடைக்கும் என்ற வாக்குறுதியோடு வந்தவன் அடுத்த நாளே கூட வந்த மாணவர்கள் ஆளுக்கொரு பக்கம் கலைய, அந்நிய நிலத்தில் போக்கிடம் ஏது என்றதில் இருந்து அடுத்த வேளை வயித்தைக் கழுவ என்ன செய்யலாம், கூடப் படித்த சிங்கள மாணவர்கள் பள்ளியில் என்னை தீவிரவாதிகளின் இனம் என்று வெள்ளையருக்கு அடையாளப்படுத்தியது வரையான வாழ்வியல் சிக்கலகளை […]... Read More
blogger-image-1845459507

வானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் நினைவில் திரு.B.H.அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கிய பகிர்வு

வானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் நினைவில் திரு B.H.அப்துல்ஹமீத் அவர்கள் வழங்கும் நினைவுப் பகிர்வு 📻 பசுமை நிறைந்த நினைவுகளே……. பறந்து சென்றதே – ஒரு பறவை. இலங்கை வானொலி வரலாற்றில் ‘சொற்சொரூபவதியாய்’ போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு ‘மூத்த’ சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது.  ‘யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்’ அவருக்கு […]... Read More
download

நிறைவுற்ற பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோடு பிறந்து வளர்ந்தவர்களோ அல்லது அதற்குச் சில ஆண்டுகள் முந்திப் பிறந்தவர்களோ இன்றும் தமது வாழ்வின் அங்கமாகக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  தன்னுடைய ஒலிபரப்பு நிறுத்தத்துக்குக் காரணமாக பெருகி வரும் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களை ஆதாரம் காட்டினாலும் அவை எந்த வகையில் பதிலீடாக இருக்கப் போகிறது என்ற கேள்விக்கான பதில் […]... Read More
gallery-1427132983-book-lover-quotes

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – கேள்வியும் நானே பதிலும் நானே

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் 📚 கேள்வியும் நானே பதிலும் நானே 📚 📖 நிறையப் படித்த எழுத்தாளர் படைப்புகள் செங்கை ஆழியான், சுஜாதா 📖 பிடித்த எழுத்தாளர் படைப்புகளில் படைத்ததில் பிடித்த நாவல்கள் காட்டாறு – செங்கை ஆழியான் பிரிவோம் சந்திப்போம் – சுஜாதா 📖 இன்று வரை மறக்க முடியாத படைப்புகள் கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன் மனித மாடு – அ.செ.முருகானந்தம் மனித மாடு நூல் இணைப்பு http://www.noolaham.org/wiki/index.php/மனித_மாடு 📖 […]... Read More
blogger-image-1428843232

சீனிப்புளியடியில படிச்சனான்

அப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலான போது அப்பாவுக்குக் கிடைத்தது தாவடி இந்துத் தமிழ்க் கலைவன் பாடசாலை, அம்மாவுக்கோ இணுவில் அமெரிக்கன் மிஷன் பாடசாலை. எனக்கும் கணக்காக ஆரம்பப் பள்ளியைத் தொடங்கக் கணக்காக இருந்தது அந்தக் காலம். தாவடியில் உள்ள தோட்டத்துக்கு இருட்டு மாறாத வெள்ளணவே போய் இரண்டு மணி நேரம் இறைப்பு அது இதெண்டு தோட்ட வேலை செய்து விட்டுப் பின்னர் […]... Read More
C5lIWo-U8AAkK92 blogger-image-1287453586

எஸ்.ஜி.சாந்தன்

“செந்தூருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு”  உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்  “சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா?” கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் […]... Read More
unnamed

"அது எங்கட காலம்" பிறந்த கதை

“அது எங்கட காலம்”  பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக “மடத்துவாசல் பிள்ளையாரடி” என்ற வலைப்பதிவினூடாக கடந்த 11 வருடங்களாக எழுதிய பதிவுகளில் தேர்ந்தெடுத்த 21 கட்டுரைகளை வைத்து நூலாக்க வேண்டும், அந்தப் பதிவுகளில் இடம் பிடித்த இறந்து போனவர்களும் இன்னும் வாழ்பவர்களுமான எங்களூர் மனிதர்களோடு வாழ்ந்தவர்கள் முன்னால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது. இம்முறை தாயகப் பயணத்தில் அதை மெய்ப்படுத்த எண்ணி, ஜீவநதி […]... Read More
blogger-image-768745207

ராஜ ஶ்ரீகாந்தனின் "காலச் சாளரம்"

எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களைப் பற்றிப் புலம் பெயர்ந்த பின்பு தான் அதிகம் அறிந்து கொண்டேன். நான் தாயகத்தில் இருந்த போது  மல்லிகை இதழில் அவரின் எழுத்துகளைப் படித்திருக்கக் கூடும். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் “ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள்” என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அவர் வழியாகவும், மறைந்த அன்புச் சகோதரி, எழுத்தாளர் திருமதி அருண்விஜயராணி வழியாகவும் அவர் பற்றி அறிமுகம் கிட்டியது, ஏன் இந்த நூல் கூட அருண் விஜயராணி அக்கா தன்னிடமிருந்த ஒரு […]... Read More